அண்மைய செய்திகள்

recent
-

தூக்கில் தொங்கிய நிலையில் மீட்கப்பட்ட இளைஞன் உயிரிழப்பு

தூக்கில் தொங்கிய நிலையில் மீட்கப்பட்ட இளைஞன் ஒருவன் சிகிச்சை பலனின்றி உயிரிழந்த சம்பவம் ஒன்று பொலி கண்டியில் இடம்பெற்றுள்ளது.


பத்திரகாளி கோயிலடியைச் சேர்ந்த சண்முகநாதன் பிரசாத் (வயது - 20) என்ற இளைஞனே இவ்வாறு உயிரிழந்துள்ளான். சம்பவம் பற்றி மேலும் தெரியவருவதாவது,

 பிரஸ்தாப இளைஞன் தனது வீட்டு மாமரத்தில் கயிறு கட்டி தூக்கில் தொங்கியுள்ளார்.

 இதனை மாமியார் கண்டு அயலவரின் உதவியுடன் அவரை மீட்டு மந்திகை ஆதார வைத்திய சாலையின் அவசர சிகிச்சைப் பிரிவில் சேர்த்தும் சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்துள்ளார்.

 இச்சம்பவம் நேற்றுக்காலை 11.30 மணியளவில் இடம்பெற்றுள்ளது. சடலம் மரண விசாரணைக்காக மந்திகை வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளதுடன் வல்வெட்டித்துறை பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.

தூக்கில் தொங்கிய நிலையில் மீட்கப்பட்ட இளைஞன் உயிரிழப்பு Reviewed by Admin on July 28, 2013 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.