அண்மைய செய்திகள்

recent
-

'தமிழை இரண்டாம் மொழியாக அறிமுகம் செய்யவும்'

தமிழ் மக்கள் கூடுதலாக வசிக்கும் இடங்களிலுள்ள பாடசாலைகளில் பிரெஞ்சு மற்றும் ஸ்பானிஷ் மொழிகள் போன்று தமிழையும் இரண்டாவது மொழியாக அறிமுகம் செய்யுமாறு வட அமெரிக்கா தமிழர் சங்கங்களின் சம்மேளனம் கோரிக்கை விடுத்து வருகின்றதாக சம்மேளனத்தின் பணிப்பாளர் ஆர்.போர்செழியன் கூறினார்.


 இது தொடர்பில் அவர் இந்திய ஊடகமொன்றுக்கு தெரிவித்துள்ளதாவது,

 'அமெரிக்க தமிழ் அக்கடமி பல பாடசாலைகளில் தமிழ்மொழி, கலாசாரம் என்பவற்றை கற்பித்து வருகின்றது. இதற்கென பாடப் புத்தகங்கள் தயாரிக்கப்பட்டுள்ளன.

தமிழ்மொழியுடன் இசை, சண்டைக்கலை என்பனவும் கற்பிக்கப்படுகின்றன. 45 பாடசாலைகளிலுள்ள 5,000 மாணவர்களுக்கு 500 தொண்டராசிரியர்கள் தமிழ் போதித்து வருகின்றனர்.

 குடிவந்த தமிழர்கள், இளம் தலைமுறையினர் தமது கலாசார பாரம்பரியங்களை பேண வேண்டுமென விரும்புகின்றனர். 35 வருடங்களுக்கு முன்னரே தமிழ்சங்கங்கள் நிறுவப்பட்டன. 25 வருடங்களுக்கு முன் சம்மேளனம் அமைக்கப்பட்டது.


'தமிழை இரண்டாம் மொழியாக அறிமுகம் செய்யவும்' Reviewed by Admin on July 24, 2013 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.