அண்மைய செய்திகள்

recent
-

பணிபுரியும் இடங்களிலேயே பெண்கள் அதிக வன்முறைக்குள்ளாகின்றனர்; மைத்திரிபால சிறிசேன

வீடுகளை விடவும் அரச நிறுவனங்கள் மற்றும் திணைக்களங்களிலேயே பெண்கள் அதிகளவில் பாலியல் ரீதியாக துன்புறுத்தப்படுகின்றனர் என சுகாதார அமைச்சு குற்றஞ்சாட்டியுள்ளது.



அதன்படி சுகாதார அமைச்சு மற்றும் அதன் இணை நிறுவனங்களில் கடமையாற்றி வரும் பெண்கள் அதிகளவில் பாலியல் ரீதியாக துன்புறுத்தப்படுவதாக சுகாதார அமைச்சர் மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.

கொழும்பில் நடைபெற்ற பெண்களுக்கு எதிரான வன்முறைகள் குறித்த கருத்தரங்கொன்றில் கலந்து கொண்டு கருத்துத் தெரிவிக்கும் போதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

பெண்களுக்கெதிரான வன்முறைகள் குறித்து சுகாதார திணைக்களம் உரிய நடவடிக்கை எடுக்கத் தவறியுள்ளது. எனவே இது தொடர்பில் விசாரணை நடாத்துவதற்கான பொறுப்பை பொலிஸாரிடம் ஒப்படைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகின்றது.

அத்துடன் பெண்களுக்கான வன்முறைகள் குறித்து விசாரணை நடாத்தும் அதிகாரிகளுக்கு தொழிற்சங்கங்களினால் அழுத்தம் பிரயோகிக்கப்படுகின்றது. பெண்களுக்கு எதிரான வன்முறைகள் பற்றி பலர் பேசினாலும் இதுவரையில் அதற்கு எதிராக எவரும் நடவடிக்கை எடுக்கவில்லை.

எனினும் வீடுகளை விடவும் அரச நிறுவனங்கள் மற்றும் திணைக்களங்களில் பெண்கள் அதிகளவில் பாலியல் ரீதியாக துன்புறுத்தப்படுகின்றனர். ரையும் கோர்ட்டும் அணிந்து கம்பீரத்துடன் இருக்கும் அதிகாரிகள் செய்யும் இழி செயல்களை நாம் அறிவோம். எனினும் எதிர்காலத்தில் இதற்கான முற்றுப்புள்ளி வைக்கப்படும் எனவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.



பணிபுரியும் இடங்களிலேயே பெண்கள் அதிக வன்முறைக்குள்ளாகின்றனர்; மைத்திரிபால சிறிசேன Reviewed by Admin on July 31, 2013 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.