கூலித் தொழிலாளியின் வீட்டுக்குள் புகுந்த பொலிஸார் உடைமைகளை அள்ளி வீசி அடாவடி; பாடசாலையிலிருந்து திரும்பிய பிள்ளைகள் உடை மாற்ற முடியாமல் அவலம்
நீதிமன்றத்தின் அனுமதி பெறப்படாமலேயே இவ்வாறு நடந்து கொண்டனர் எனப் பாதிக்கப்பட்டவர்கள் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. வெளியேற்றப்பட்ட குடும்பத்தைச் சேர்ந்த இரு சிறுவர்கள் பாடசாலைச் சீருடையில் வீதியில் நின்றிருந்ததோடு மற்றைய சிறுவர்கள் பசியினால் அழுதவண்ணம் வீதியில் நின்றிருந்தனர். குறிப்பிட்ட வீட்டில் வாடகைக்கு குடி யிருந்து வந்த குடும்பத்தை அந்த வீட்டுக்கு முன்னால் வசிக்கும் குடும்பத்தினரே அங்கு குடியமர்த்தியுள்ளனர்.
உரிமையாளர்கள் வெளிநாட்டில் வசிப்பதாகவும் அவர்களிடமிருந்து வீட்டைத் தாம் விலைக்கு வாங்கி விட்டதாகவும் கூறியே தமக்கு வீடு வாடகைக்குத் தரப்பட்டு வாடகைப் பணம் அறவிட்டதாகவும் பாதிக்கப்பட்ட குடும்பத்தினர் கூறினர். வெளிநாட்டிலிருந்து அண்மையில் யாழ்ப்பாணம் வந்த வீட்டின் உரிமையாளர்களான தாயும் மகளும் கடந்த ஞாயிற்றுக்கிழமை இராணுவத்தினரின் உதவியுடன் அங்கு வந்து வீட்டில் குடியிருந்தவர் களை வெளியேறுமாறு வற்புறுத்தியுள்ளனர்.
இச்சூழ்நிலையில் நேற்றுக் குறித்த வீட்டுக்குச் சென்ற யாழ்ப்பாணப் பொலிஸார் மதியம் சமைத்த சாப்பாடு உட்பட அனைத்தையும் தூக்கி வெளியே வீசினர். பின்னர் வீட்டிலிருந்தவர்களை வெளியேற்றிவிட்டுக் கதவைப் பூட்டித் திறப்பை வெளிநாட்டில் இருந்து வந்தவர்களிடம் ஒப்படைத்துவிட்டுச் சென்றனர். பாடசாலைக்குச் சென்று திரும்பிய இரு சிறுவர்களும் மாற்றுடை இன்றி வீதியில் நின்றதுடன் மற்றைய இரு சிறுவர்கள் உண்ண உணவின்றி பசியால் அழுதவண்ணமிருந்தனர்.
இதனைப் பார்த்து அவ்விடத்தில் ஒன்றுகூடிய அயலவர்கள் பொலிஸாரின் இந்த அராஜகச் செயலை வன்மையாக் கண்டித்தனர். தம்மை வீட்டில் இருந்து வெளியேற்றியமை மற்றும் பொருள்களைத் தூக்கி வீசியமை தொடர்பான முறைப்பாட்டைப் பதிவு செய்யச் சென்ற குறித்த குடும்பத் தலைவரை பொலிஸார் கைதுசெய்துள்ளனர் என்று தெரியவருகிறது. இது தொடர்பாக யாழ்.பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி சமன்சிகேராவுடன் தொடர்பு கொண்டு கேட்டபோது, தற்போது அது தொடர் பான விசாரணைகள் இடம்பெற்று வருவதாகக் கூறினார்.
கூலித் தொழிலாளியின் வீட்டுக்குள் புகுந்த பொலிஸார் உடைமைகளை அள்ளி வீசி அடாவடி; பாடசாலையிலிருந்து திரும்பிய பிள்ளைகள் உடை மாற்ற முடியாமல் அவலம்
Reviewed by Admin
on
July 31, 2013
Rating:

No comments:
Post a Comment