தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் இரண்டு நிபந்தனைகளை அரசாங்கம் நிராகரிப்பு
வடக்கு மாகாணசபைத் தேர்தல்கள் தொடர்பில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு இந்த நிபந்தனைகளை விதித்ததாகத் தெரிவிக்கப்படுகிறது. இராணுவத்தினரை முகாம்களுக்கு மட்டும் வரையறுத்தல் மற்றும் தமிழ் அரசியல் கைதிகளை விடுதலை செய்தல் ஆகிய கோரிக்கைகளை அரசாங்கம் நிராகரித்துள்ளது.
எனினும், வடக்கில் பக்கச்சார்பற்ற தேர்தலை நடாத்துமாறும், இடம்பெயர் மக்களை மீள்குடியேற்றுமாறும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு விடுத்த கோரிக்கைகளை அரசாங்கம் ஏற்றுக்கொண்டுள்ளது.
858 தமிழீழ விடுதலைப் புலி உறுப்பினர்கள் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர். பாரிய குற்றச் செயல்களுடன் தொடர்புடைய சந்தேக நபர்களை விடுதலை செய்யத் தயாரில்லை என அரசாங்கம் அறிவித்துள்ளது. இதேவேளை, வட மாகாணசபைத் தேர்தலின் போது பொலிஸார் கடமையில் ஈடுபடுத்தப்பட உள்ளதாக பாதுகாப்பு அமைச்சு அறிவித்துள்ளது.
அவசர நிலைமைகளின் போது தேவை ஏற்பட்டால் இராணுவத்தின் ஒத்துழைப்பு பெற்றுக்கொள்ளப்படும் என தெரிவித்துள்ளது.
தேசியப் பாதுகாப்பு தொடர்பில் எந்தவொரு அரசியல் கட்சியுடனும் இணக்கப்பாடுகளை ஏற்படுத்திக் கொள்ளத் தயாரில்லை என பாதுகாப்புச் செயலாளர் கோத்தபாய ராஜபக்ச தெரிவித்துள்ளார்.
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் இரண்டு நிபந்தனைகளை அரசாங்கம் நிராகரிப்பு
Reviewed by Admin
on
July 17, 2013
Rating:

No comments:
Post a Comment