அண்மைய செய்திகள்

recent
-

வவுனியாவில் ஆசிரியரால் தாக்கப்பட்ட மாணவன் வைத்தியசாலையில் அனுமதி

ஆசிரியர் ஒருவரால் தாக்குதலுக்குள்ளான நிலையில், 10 வயது மாணவன் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக வவுனியா மாவட்ட சிறுவர் உரிமை மேம்பாட்டு அதிகாரி ஜெ.ஜெயக்கெனடி தெரிவித்துள்ளார்.


 நேற்று வவுனியாவில் உள்ள பிரபல தமிழ் பாடசாலையில் 5ம் ஆண்டில் கல்வி கற்கும் மாணவனே இவ்வாறு தாக்குதலுக்கு உள்ளாகியுள்ளார். இச் சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது, மாணவன் அணிந்திருந்த கண்ணாடியை கழற்றி வைக்குமாறு கூறியபின்னர் அம்மாணவனுக்கு கன்னத்தில் கடுமையாக தாக்கியதுடன் கோபம் தீராத காரணத்தால் அம்மாணவனின் முதுகில் குனிய வைத்து பலமாக குறிப்பிட்ட ஆசிரியர் தாக்கியுள்ளார்.

 ஆசிரியரின் தாக்குதலால் மாணவன் பாதிப்படைந்த நிலையில் வவுனியாவில் உள்ள தனியார் வைத்திசாலையில் உடனடியாக சிகிச்சைக்கு சென்ற சமயம் தனியார் வைத்தியாலையின் வைத்திய அதிகாரி உடனடியாக பொது வைத்தியசாலையை நாடுமாறு பணித்துள்ளார்.

 எனவே மாணவன் வவுனியா பொது வைத்திசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றார் என தெரிவித்தார்.


வவுனியாவில் ஆசிரியரால் தாக்கப்பட்ட மாணவன் வைத்தியசாலையில் அனுமதி Reviewed by Admin on July 17, 2013 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.