பிரித்தானிய எம்.பிக்கள் குழு இலங்கைக்கு விஜயம்
அவர்கள்,எதிர்வரும் 26 ஆம் திகதி வரையிலும் இலங்கையில் தங்கியிருப்பதுடன் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ, சபாநாயகர் சமல் ராஜபக்ஷ, வெளிவிவகார அமைச்சர் ஜி.எல். பீரிஸ், எதிர்க்கட்சித் தலைவர் ரணில் விக்கிரமசிங்க மற்றும் ஏனைய கட்சிகளின் முக்கியஸ்தர்களையும் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
'கொன்சர்வேட்டிவ்' கட்சியின் எலேனர் லையிங், தொழிற்கட்சியின் சைமன் டன்சுக்கு, கெரிமக்கர்தி, சேய்க் பிரபு, பரோனஸ் ஹேய்ரர் ஆகியோரே இலங்கைக்கு விஜயம் செய்துள்ளனர்.
உண்மையைக் கண்டறிவதற்காக உத்தியோகபூர்வ பயணமொன்றை மேற்கொண்டு நேற்று இலங்கைக்கு வருகைதந்த அந்த குழுவினர் கொழும்பு, ஹுனுப்பிட்டிய கங்காராம விஹாரைக்கு சென்று நேற்று வழிபாடுகளிலும் ஈடுபட்டனர்.
இந்த பிரித்தானிய நாடாளுமன்றக்குழுவினர் கிளிநொச்சி, முல்லைத்தீவு ஆகிய பிரதேசங்களுக்குச் செலவதுடன் முள்ளிவாய்க்கால் பகுதிக்கும் செல்லவுள்ளனர்.
போருக்குப் பின்னரான இலங்கை அரசின் நல்லிணக்க செயற்பாடுகள் தொடர்பிலும் மனித உரிமை நிலைவரங்கள் குறித்தும் ஆராயும் பொருட்டே இந்தக்குழு இலங்கைக்கு பயணத்தை மேற்கொண்டுள்ளது என்று தெரிவிக்கப்படுகின்றது.
இந்த உண்மை கண்டறியும் பயணத்தை பொதுநலவாய நாடாளுமன்றச் செயலகமும், கொழும்பிலுள்ள பிரித்தானிய தூத ரகமும் ஒழுங்கு செய்துள்ளமை குறிப்பிடத்தக்கதாகும்.
பிரித்தானிய எம்.பிக்கள் குழு இலங்கைக்கு விஜயம்
Reviewed by Admin
on
July 23, 2013
Rating:

No comments:
Post a Comment