வவுனியா மற்றும் மன்னார் மாவட்டங்களில் 4 ஆயிரத்து 453 குடும்பங்களுக்கு அரச காணிகள் பகிர்ந்தளிக்கப்படவுள்ளன.
வவுனியா மற்றும் மன்னார் மாவட்டங்களில் 4 ஆயிரத்து 453 குடும்பங்களுக்கு அரச காணிகள் பகிர்ந்தளிக்கப்படவுள்ளன. இதற்கான பணிகள் தீவிரமாக இடம்பெற்று வருகின்றன. 4 ஆயிரம் முஸ்லிம்களுக்கும் 500 வரையான தமிழர்களுக்கும் இந்தக் காணிகள் வழங்கப்படவுள்ளன.
மன்னார் மாவட்டத்தில் முசலி பிரதேச செயலகத்துக்கு உட்பட்ட பகுதியில் 2 ஆயிரத்து 895 பேருக்கு காணிகள் வழங்கப்படவுள்ளன என்று முசலி பிரதேச செயலர் கேதீஸ்வரன் தெரிவித்தார்.
மாந்தை மேற்கு பிரதேச செயலர் பிரிவில் 628 குடும்பங்களுக்கும், மடுவில் 444 குடும்பங்களுக்கும், வவுனியா மாவட்டத்தில் வவுனியா பகுதியில் 275 குடும்பங்களுக்கும், செட்டிகுளத்தில் 211 குடும்பங்களுக்கும் காணிகள் வழங்கப்படவுள்ளன.
இந்த நடவடிக்கைகள் குறித்து வடமாகாண காணி ஆணையாளரைத் தொடர்பு கொண்டு கேட்டபோது,
அவ்வாறு ஒரு சம்பவம் பற்றி எனக்கு எதுவும் தெரியாது. அப்படியொரு நிகழ்வு நடப்பதாகவும் இல்லை” எனத் தெரிவித்தார்.
.jpg)
குறிப்பாக அரிப்பு, சௌத்பார், கொக்குப்புடையான் போன்ற இடங்களில் தெரிவுசெய்யப்பட்ட காடுகள் அழிக்கப்பட்டு அங்கு அரை ஏக்கர் வீதம் காணிகளைப் பகிர நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
இதற்கான நிதி ஒதுக்கீடுகளை வடமாகாண ஆளுநர் ஏற்படுத்தித் தந்துள்ளார். காணிகள் வழங்கப்பட்டதும் அதில் இந்திய வீட்டுத் திட்டத்தை ஏற்படுத்திக் கொடுக்கவும் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ள என்று மேலும் தெரிவித்தார் முசலி பிரதேச செயலர்.
“1990களில் இடம்பெயர்ந்த 2,300 முஸ்லிம் குடும்பங்கள் தற்போது 7இ000 குடும்பங்களாக மீளக்குடியமர்ந்த நிலையில்இ அவர்களில் பெரும்பாலானவர்கள் காணியற்று உள்ளனர். இந்த நிலையைக் கருத்திற்கொண்டே அவர்களுக்குக் காணி வழங்கப்படுகிறது.
இதனை வைத்துக் கொண்டு முஸ்லிம் மக்களுக்கு காணி வழங்கப்படுவதாக கருதிவிட முடியாது. தமிழ்க் குடும்பங்கள் ஏற்கனவே காணிகளை கொண்டுள்ளன” எனவும் அவர் தெரிவித்தார்.
இதேவேளை காணி ஆணையாளர் திணைக்களம் ஜனாதிபதி செயலணிக் குழு என்பவற்றின் பணிப்புரைப்படி வவுனியா, முல்லைத்தீவு, மன்னார் ஆகிய மாவட்டங்களில் காணி பங்கீடு நிறுத்தப்பட வேண்டும் என விடுக்கப்பட்டிருந்த அறிவிப்பு அண்மையில் திரும்ப பெறப்பட்டிருந்தது என பெயர் குறிப்பிட விரும்பாத அரச அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
வவுனியா மற்றும் மன்னார் மாவட்டங்களில் 4 ஆயிரத்து 453 குடும்பங்களுக்கு அரச காணிகள் பகிர்ந்தளிக்கப்படவுள்ளன.
Reviewed by Admin
on
July 05, 2013
Rating:
.jpg)
No comments:
Post a Comment