இரண்டு வருடங்களில் எதை சாதித்தார்கள் மன்னார் நகர சபை நிர்வாகம்?- நகர சபை உறுப்பினர் என்.நகுசீன்.
நடைபெறவுள்ள வடமாகாண சபை தேர்தலை முன்னிட்டு ஊடகங்களுக்கு அறிக்கை விடுகின்ற தமிழ் தேசியக்கூட்டமைப்பின் மன்னார் நகர சபை உறுப்பினர் குமரேஸ் இந்த 2 வருடங்களில் மன்னார் நகர சபையினர் எதனை சாதித்திருக்கின்றார்கள் என்பதனை பகிரங்கமாக மக்களுக்கு தெரிவிக்க வேண்டும் என்று மன்னார் நகர சபையின் அரச தரப்பு உறுப்பினர் நிலாமுதீன் நகுசீன் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் ஊடக அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.
அதில் மேலும் குறிப்பிடுகையில்,,,,
கடந்த காலங்களில் நடந்த சம்பவங்கள்,மக்களுக்கு இழைக்கப்பட்ட அநீதிகள் ஆகியவற்றை அவர்கள் மறந்து விட்டார்கள்.முட்டைக்கு வரி எடுத்தவர்கள் இன்று மக்களைப்பற்றி பேசுகின்றார்கள்.
அரசியல் பேசத்தெரியாதவர்கள் இன்று மக்களைப்பற்றி பேசுகின்றனர்.நான் அவர்களுக்கு பகிரங்கமாக சவால் விடுக்கின்றேன் பகிரங்கமாக விவாதத்திற்கு அழைக்கின்றேன் .இந்த நகர சபை மன்னார் மக்களுக்கு தங்களது ஊழல் நிறைந்த ஆட்சியை தவிர எதனை செய்தது.
மன்னாரில் எத்தனையோ பாதைகள் சீர் கெட்டுள்ள பாதைகளாக காணப்படுகின்றது.ஒரு பாதையைக்கூட சீர் செய்ய முடியாத இந்த நகர சபை சிறு சிறு பிரச்சினைகளை தீர்த்து வைக்க முடியாத நிலையில் மன்னாரில் வீதிகள் திறப்பு விழா நிகழ்வில் அழைக்கப்பட வில்லை என்பதற்காக மன்னாரின் அபிவிருத்தியை கொச்சைப்படுத்தும் வகையில் கருத்துக்களை வெளியிடுகின்றனர்.
யாரால் பாதைகள் சீர் செய்ய முடியும்,யாரால் படித்த இளைஞர்களுக்கு தொழில் வாய்ப்புக்களை வழங்க முடியும் என்று மன்னார் மக்களுக்கு நன்கு தெரியும்.
அமைச்சர் றிஸாட் பதீயுதின் மன்னார் மாவட்டத்தை பொறுத்தவரையில் சாதி மதம் பாராது தனது சேவையை செய்து வருகின்றார்.
இது மக்களுக்கு நன்கு தெரியும்.ஒரு சில அரசியல் வாதிகள் அமைச்சரின் இந்த செயற்பாடுகளை பொருத்துக்கொள்ள முடியாத நிலையில் அறிக்கைகளை விட்டு வருகின்றனர்.
எனவே குறித்த அரசியல் வாதிகள் ஊடகங்களுக்கு அடிக்கடி அறிக்கை விடுவதை நிறுத்தி விட்டு மன்னாரின் அபிவிருத்தியிலும்,இளைஞர் யுவதிகளின் தொழில் வாய்ப்புக்களுக்கும் முக்கியத்துவம் கொடுக்க முன் வர வேண்டும்.
இனியாவது அரசுடன் இணைந்து பல நல்ல திட்டங்களுக்கு ஆதரவு கொடுத்து மன்னார் நகர மக்களுக்கு அவர்களின் தேவையை நிறைவேற்ற நகர சபை முன்வர வேண்டும் என கேட்டுக்கொள்ளுகின்றேன். என குறித்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
-மன்னார் நிருபர்-
இது தொடர்பாக அவர் ஊடக அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.
அதில் மேலும் குறிப்பிடுகையில்,,,,
கடந்த காலங்களில் நடந்த சம்பவங்கள்,மக்களுக்கு இழைக்கப்பட்ட அநீதிகள் ஆகியவற்றை அவர்கள் மறந்து விட்டார்கள்.முட்டைக்கு வரி எடுத்தவர்கள் இன்று மக்களைப்பற்றி பேசுகின்றார்கள்.
அரசியல் பேசத்தெரியாதவர்கள் இன்று மக்களைப்பற்றி பேசுகின்றனர்.நான் அவர்களுக்கு பகிரங்கமாக சவால் விடுக்கின்றேன் பகிரங்கமாக விவாதத்திற்கு அழைக்கின்றேன் .இந்த நகர சபை மன்னார் மக்களுக்கு தங்களது ஊழல் நிறைந்த ஆட்சியை தவிர எதனை செய்தது.
யாரால் பாதைகள் சீர் செய்ய முடியும்,யாரால் படித்த இளைஞர்களுக்கு தொழில் வாய்ப்புக்களை வழங்க முடியும் என்று மன்னார் மக்களுக்கு நன்கு தெரியும்.
அமைச்சர் றிஸாட் பதீயுதின் மன்னார் மாவட்டத்தை பொறுத்தவரையில் சாதி மதம் பாராது தனது சேவையை செய்து வருகின்றார்.
இது மக்களுக்கு நன்கு தெரியும்.ஒரு சில அரசியல் வாதிகள் அமைச்சரின் இந்த செயற்பாடுகளை பொருத்துக்கொள்ள முடியாத நிலையில் அறிக்கைகளை விட்டு வருகின்றனர்.
எனவே குறித்த அரசியல் வாதிகள் ஊடகங்களுக்கு அடிக்கடி அறிக்கை விடுவதை நிறுத்தி விட்டு மன்னாரின் அபிவிருத்தியிலும்,இளைஞர் யுவதிகளின் தொழில் வாய்ப்புக்களுக்கும் முக்கியத்துவம் கொடுக்க முன் வர வேண்டும்.
இனியாவது அரசுடன் இணைந்து பல நல்ல திட்டங்களுக்கு ஆதரவு கொடுத்து மன்னார் நகர மக்களுக்கு அவர்களின் தேவையை நிறைவேற்ற நகர சபை முன்வர வேண்டும் என கேட்டுக்கொள்ளுகின்றேன். என குறித்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
-மன்னார் நிருபர்-
இரண்டு வருடங்களில் எதை சாதித்தார்கள் மன்னார் நகர சபை நிர்வாகம்?- நகர சபை உறுப்பினர் என்.நகுசீன்.
 
        Reviewed by Admin
        on 
        
July 08, 2013
 
        Rating: 
      
No comments:
Post a Comment