அண்மைய செய்திகள்

recent
-

யுத்தத்தினால் கணவனை இழந்த குடும்பங்களை தலைமை தாங்கும் பெண்களுக்கு சுய தொழில் உபகரணங்கள் வழங்கி வைப்பு.

யுத்தத்தினால் கணவனை இழந்த குடும்பங்களை தலைமை தாங்கும் பெண்களுக்கு சுய தொழிலை மேற்கொள்ளுவதற்கான சுய தொழில் உபகரணங்கள் மன்னார் மாவட்ட மீனவ ஒத்துழைப்பு பேரவையினால் நேற்று சனிக்கிழமை மன்னார் மாவட்ட மீனவ ஒத்துழைப்பு பேரவையில் வைத்து வழங்கி வைக்கப்பட்டது.

 இந்த சுய தொழில் பொருட்கள் வழங்குவதற்காக தெரிவு செய்யப்பட்ட 103 பயனாளிகளில் முதல் கட்டமாக 19 பேருக்கு வழங்கி வைக்கப்பட்டது. இவர்களில் 10 பேருக்கு சிறு கடை நடத்துவதற்கான பொருட்களும்,ஏனைய 09 பேருக்கும் தையல் உபகரணங்களும் வழங்கி வைக்கப்பட்டுள்ளது. ஏனைய பயனாளிகளுக்கு இரண்டாம் கட்ட நிகழ்வில் வழங்கப்படவுள்ளது.

 குறித்த நிகழ்வில் மன்னார் மாவட்ட மீனவ ஒத்துழைப்பு பேரவையின் இணைப்பாளர் எஸ்.சுனேஸ் சோசை, தேசிய மீனவ ஒத்துழைப்பு இயக்கத்தின் அமைப்பாளர் எஸ்.கேமன் , வடகிழக்கு இணைப்பாளர் எஸ்.ஜேசுதாசன் மற்றும் இடம் பெயர்ந்த மக்களின் திட்ட இணைப்பாளர் பிரியங்கர கொஸ்தா ,இளைளுர் திட்ட இணைப்பாளர் லக்சிறி, பிரஜா அபிலாசை வலை அமைப்பின் இணைப்பாளர் திரு ராஜன் மற்றும் பெண்கள் திட்ட இணைப்பாளர் லவினா , மன்னார் மாவட்ட பிரஜைகள் குழுவின் தலைவர் அரு.திருசெபமாலை அடிகளார் , மன்னார் பிரதேச சபை உப தலைவர் ஏ.சகாயம் , மன்னார் மாவட்ட மீனவ கூட்டுறவு சங்கங்களின் சமாச தலைவர் எம்.எம்.ஆலம், ஆகியோர் கலந்து கொண்டு பாதிக்கப்பட்ட பெண்களுக்கான சுயதொழில் பொருட்கள் வழங்கி வைத்தமை குறிப்பிடத்தக்கது.






யுத்தத்தினால் கணவனை இழந்த குடும்பங்களை தலைமை தாங்கும் பெண்களுக்கு சுய தொழில் உபகரணங்கள் வழங்கி வைப்பு. Reviewed by Admin on August 11, 2013 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.