மன்னார் தாழ்வுபாடு மீனவர் கூட்டுறவுச்சங்கம் தொடர்பாக வெளியான கருத்திற்கு தாழ்வுபாடு மீனவ சமுகம் விசனம்.
குறித்த செய்தி தொடர்பாக தாழ்வுபாடு மீனவ சமூகமும், தாழ்வுபாடு மீனவ கூட்டுறவுச்சங்க நிர்வாகமும் கருத்து தெரிவிக்கையில்,,,,
மன்னார் மாவட்டத்தில் உள்ள மீனவ சங்கங்களில் தாழ்வுபாடு மீனவர் கூட்டுறவுச்சங்கம் முதன்மை வகித்து வருகின்றது.குறித்த சங்கத்தின் தலைவரும்,பணிப்பாளர்களும் குறித்த கிராம மீனவ குடும்பங்களுக்கு பல்வேறு நல்ல திட்டங்களை முன்னெடுத்து வருகின்றது.
குறிப்பாக தாழ்வுபாடு கிராம மாணவர்கள்,விளையாட்டு வீரர்கள் சாதனை படைத்தால் அவர்களை விசேட விதமாக கௌரவப்படுத்துகின்றனர்.
சங்கத்தின் சகல பிரதிநிதிகளின் ஆலோசனைக்கு அமைவாக சங்கம் செயற்பட்டு வருகின்றது.
தாழ்வுபாடு மீனவர் சங்கத்தின் 25 ஆவது வருட நிறைவு விழாவை வெகு விமர்சையாக கொண்டாடுவதற்கு தலைவரும்,சங்கத்தின் பணிப்பாளர்களும் , சகல உறுப்பினர்களும் இணைந்து திட்டமிட்டுள்ள நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றோம்.
இதன் போது ஒவ்வவெரு மீனவர்களும் இதில் கௌரவிக்கப்படவுள்ளனர்.
எனவே எமது சங்கத்திற்கு எதிரான சிலர் எமகு கிராமத்திற்கும்,எமது சங்கத்திற்கும்,குறிப்பாக சங்கத்தின் தலைவருக்கும் அவப்பெயரை தோற்றுவிக்கும் வகையில் கருத்துக்களை வெளியிட்டுள்ளனர்.
எனவே குறித்த கருத்துக்களை நாங்கள் வன்மையாக கண்டிப்பதோடு இனி வரும் காலத்தில் இது போன்ற தேவையற்ற கருத்துக்கள் வெளிவருவதை நாங்கள் தவிர்த்துக் கொள்ள வேண்டும்.என தெரிவித்தனர்.
மன்னார் இணையத்தில் இச் செய்தி வெளியிட்டதை இட்டு தாழ்வுபாடு மீனவ சமுகத்துக்கு மன்னார் இணையம் தனது வருத்தத்தை தெரிவித்துக்கொள்கின்றது.
மன்னார் தாழ்வுபாடு மீனவர் கூட்டுறவுச்சங்கம் தொடர்பாக வெளியான கருத்திற்கு தாழ்வுபாடு மீனவ சமுகம் விசனம்.
Reviewed by Admin
on
August 07, 2013
Rating:
Reviewed by Admin
on
August 07, 2013
Rating:


No comments:
Post a Comment