கழுத்தில் வெட்டுக்காயங்களுடன் பெண் ஒருவரின் சடலம் மீட்பு
மகாவோயா - பெரகல வனப்பகுதியில் உள்ள ஓடை ஒன்றிற்கு அருகிலிருந்து, கழுத்துப் பகுதியில் வெட்டுக்காயங்களுடன் பெண் ஒருவரின் சடலம் கண்டெடுக்கப்பட்டுள்ளது.
இவ்வாறு உயிரிழந்தவர் வராபிட்டிய பகுதியைச் சேர்ந்த 46 வயதுடைய பெண் என அடையாளம் காணப்பட்டுள்ளார்.
குறித்த பெண் நேற்று முன்தினம் கால்நடைகளைக் கட்டுவதற்காக இந்தக் வனத்திற்கு சென்றுள்ளார். அவர் மீண்டும் வீடு திரும்பாத நிலையில், உறவினர்களும் பிரதேசமக்களும் இணைந்து மேற்கொண்ட தேடுதலின் போது இந்தச் சடலம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
இந்தக் கொலைக்கான காரணம் என்ன அல்லது கொலையைச் செய்தது யார் என்பது குறித்து இதுவரை எந்தத் தகவலும் வெளியாகவில்லை.
இச்சம்பவம் தொடர்பாக மகாவோயா பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
கழுத்தில் வெட்டுக்காயங்களுடன் பெண் ஒருவரின் சடலம் மீட்பு
Reviewed by Vijithan
on
January 25, 2026
Rating:
Reviewed by Vijithan
on
January 25, 2026
Rating:


No comments:
Post a Comment