நல்லூர்க் கந்தனின் கொடியேற்றம் இன்று
அந்தண குருமார்களினால் வேத மந்திரங்கள் ஒலிக்க முருக பக்தர்களின் அரோகரா கோஷத்துடன் பக்திப்பரவசமாக கொடியேற்ற நிகழ்வு இடம்பெற்றது. நாட்டின் பல பாகங்களில் இருந்தும் அதிக எண்ணிக்கையான முருக பக்தர்கள் கலந்து கொண்டதுடன் ஆலய சுற்றாடலில் அமைந்துள்ள மடங்களில் அன்னதான நிகழ்வுகளும் இடம்பெற்றன.
ஆலய பாதுகாப்புக் கடமையில் பொலிசார், சென்ஜோன்ஸ் அம்புலன்ஸ் தொண்டர்கள், சாரணர்கள் மற்றும் யாழ் மாநகரசபை ஊழியர்கள் ஈடுபட்டனர். இந்நிலையில் பல எண்ணிக்கையான முருக பக்தர்கள் கொடி ஏற்ற நிகழ்வையடுத்து அங்கப்பிரதட்சணையில் ஈடுபட்டனர்.
நல்லூர்க் கந்தனின் உற்சவத்தில் செப்டெம்பர் மாதம் 3ஆம் திகதி சப்பறத்திருவிழாவும் மறுநாள் தேர்த்திருவிழாவும் செப்டெம்பர் மாதம் 5ஆம் திகதி தீர்த்தோற்சவமும் இடம்பெறவுள்ளன.
நல்லூர்க் கந்தனின் கொடியேற்றம் இன்று
Reviewed by Admin
on
August 12, 2013
Rating:

No comments:
Post a Comment