அண்மைய செய்திகள்

recent
-

தமிழ் மக்களை திட்டமிட்டு கீழ் மட்டத்தில் வைத்து அடிமையாக்கும் படலத்தை நாங்கள் வீழ்த்தி பெரும் வெற்றி பெற வேண்டும்.-சட்டத்தரணி பிறிமூஸ் சிராய்வா

தமிழ் தேசியத்தைக் காக்க ஒட்டு மொத்த தமிழ் மக்களும் தமிழ் தேசியக்கூட்டமைப்புடன் ஓரணியாக செயற்பட்டு எதிர்வரும் வடமாகாண சபை தேர்தலை தமிழ் தேசியக்கூட்டமைப்பு கைப்பற்ற அணைத்து தமிழர்களும் ஒரு மணதுடன் செயற்பட வேண்டும் என தமிழ் தேசியக்கூட்டமைப்பின் மன்னார் மாவட்ட வேட்பாளர்  சட்டத்தரணி பிறிமூஸ்  சிராய்வா தெரிவித்தார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் மேலும் தெரிவிக்கையில்,,,,

தமிழ் மக்கள் கடந்த 30 வருடங்களுக்கு மேலாக பல்வேறு துன்ப துயரங்களை சுமந்து வந்த நிலையில்  தமிழ் மக்கள் தமது சுய உரிமையையும்,சுய கௌரவத்தையும் பெற்றுக்கொள்ளும் தருணமாக வடமாகாண சபைத்தேர்தல் அமைந்துள்ளது.

கடந்த 30 வருடங்களுக்கு மேலாக எமது தமிழ் இனம் பட்ட துன்ப,துயரங்களை அளவிட முடியாது.ஆனால் அந்த மக்கள் பட்ட துன்ப துயரங்களுக்கு விடை கொடுக்கும் ஒரு தருணமாக இந்த தேர்தல் அமைந்துள்ளது.

தொடர்ந்தும் தமிழ் மக்களை கீழ் மட்டத்தில் வைத்து அடிமையாக்கும் படலம் திட்டமிட்டு தொடர்ந்து கொண்டே இருக்கின்றது.அதனை நாங்கள் வீழ்த்தி வெற்றி பெற வேண்டும்.

நடைபெறவிருக்கும் வடமாகாண சபை தேர்தலை உலக நாடுகள் மிகவும் நுன்னிப்பாக அவதானித்துக்கொண்டிருக்கின்றது.

.நாங்கள் சலுகைகளுக்கு அடிமைகள் இல்லை.தமிழ் தேசியத்தை ஆதரிக்கின்றோம்.தமிழனின் சுய கௌரவத்தை விட்டுக்கொடுக்க மாட்டோம் என்பதனை இந்த தேர்தலின் ஊடாக அரசிற்கு தெரியப்படுத்த வேண்டும்.

 எனவே தமிழ் மக்கள் இந்த வடமாகாண சபைத்தேர்தலில் தமிழ் தேசியக்கூட்டமைப்பை ஆதரித்து தமிழ் மக்கள் பட்ட துன்ப துயரங்களில் இருந்தும்,தமிழர்கள் அடிமைகள் என்ற நாமத்தில் இருந்தும் விடுதலை பெற அணைவரும் தமிழ் தேசியக்கூட்டமைப்பை ஆதரித்து தமிழ் தேசியக்கூட்டமைப்பை வெற்றியடையச் செய்ய வேண்டும் என வடமாகாண சபை தேர்தலில் தமிழ் தேசியக்கூட்டமைப்பின் மன்னார் மாவட்ட   வேட்பாளர்    சட்டத்தரணி பிறிமூஸ்  சிராய்வா வெளியிட்டுள்ள அறிக்கையில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளது.


தமிழ் மக்களை திட்டமிட்டு கீழ் மட்டத்தில் வைத்து அடிமையாக்கும் படலத்தை நாங்கள் வீழ்த்தி பெரும் வெற்றி பெற வேண்டும்.-சட்டத்தரணி பிறிமூஸ் சிராய்வா Reviewed by Admin on August 09, 2013 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.