அண்மைய செய்திகள்

recent
-

தமிழ் மக்கள் ஒரே குடையின் கீழ் இருக்கின்றார்கள் என்பதை உலக நாடு அறிந்து கொள்ள இது ஒரு நல்ல வாய்ப்பு பி. டேனிஸ்வரன்.

 எமது கட்சியின் முதலமைச்சர் வேட்பாளராக இருப்பவர் முன்னாள்  உயர் நீயரசராகவும் எமது கட்சியின் சார்பில் சட்டத்தரணிகளாக களமிறங்கி இருக்கும் நாங்களும் மாகாணசபையின் சட்டதிட்டங்ளை நன்கு அறிந்து எமது மக்களுக்கு மாகாணசபையின் ஊடாக எவ்வாறு உதவி செய்யலாம் என்பது மட்டும் அல்ல தமிழ் தேசிய கூட்டமைப்பு வடமாகாணத்தை கைப்பற்றுமாயின் தமிழ் மக்கள் ஒரே குடையின் கீழ் இருக்கின்றார்கள் என்பதை உலக நாடு அறிந்து கொள்ள இது ஒரு வாய்ப்பாகும் என மன்னார் மாவட்டத்தின் தமிழ் தேசிய கூட்டமைப்பின் சார்பில் மன்னார் மாவட்டத்தில் போட்டியிடும் வேட்பாளர் சட்டதரணி. பி. டேனிஸ்வரன்   தெரிவித்தார்.

அவர் தொடர்ந்து தெரிவிக்கையில்.........

இந்தியாவின் அழுத்தம் காரணமாகவும் மற்றும் இலங்கை அரசாங்கம் தனது அதிகாரத்தை பரவலாக்கும் நோக்கோடும் அரசியல் அமைப்பிற்கு கொண்டுவரப்பட்ட அரசியல் திருத்தச்சட்டமே 13வது திருத்தச்சட்டம்.

 இது இலங்கை அரசியல் அமைப்பின் 153, 154வது உறுப்புவையுக்கு அமைவாக கொண்டுவரப்பட்டதே இந்த 13வது திருத்தச்சட்டம். இதன் அடிப்படையில் மத்திய அரசு மாகாணங்களுக்கு உரிய அதிகாரங்கள் என்ன மாகாணங்கள் எந்தெந்த விடயங்களில் தனித்துவமாக செயற்பட முடியும்? அதோடு மத்திய அரசோடு எவ்வாறு கட்டுப்பட்டு செயற்பட வேண்டும் என்ற விடயங்களும் இதில் உள்ளடக்கப்பட்டிருக்கின்றது.

மேலும் இலங்கையின் மீயுயர் ஸ்தாபனமாக செயற்படுவது பாராளுமன்றம்.
அரசு என்ற எண்ணக்கருவுக்குள் 3 துறைகள் முக்கியமாக உள்ளடக்கப்பட்டிருக்கின்றது.
1.       நிர்வாகத்துறை
2.       நிறைவேற்றுத்துறை
3.       நீதித்துறை

இந்த 3 துறைகளும் ஒவ்வொன்றும் சட்வாட்சி சரியாக நடைபெற வேண்டும் என்றால் இந்த ஒவ்வொரு துறைகளும் ஒன்றை ஒன்று தலையீடு இல்லாமல் செல்ல வேண்டும் அப்போதுதான் ஆட்சி நன்றாக நடக்கும்.
இலங்கையில் கொண்டுவரப்பட்ட 13 வது திருத்தச்சட்டத்திற்கு அமைவாக ஸ்தாபிக்கப்பட்ட மாகாணங்கள் இருக்கின்றது .இந்த மாகாணங்களில் உண்மையாக எமது வடக்கு கிழக்கு ஆரம்பத்தில் ஒன்றாக இருந்த போதும் இடையில் பிரிக்கப்பட்டிருக்கின்றது.

வடக்கு கிழக்கிலேயே தமிழ் மக்கள் அதிகமாக வாழ்கின்ற இடம் எமது நாட்டில் இருக்கின்ற ஏனைய மாகாணங்களுடன் ஒப்பிடும் போது எவ்வளவிற்கு எம் மாகாணம் பின் தங்கி இருக்கின்றது என்பது நன்றாகத்தெரியும்.

எனவே இந்த மாகாண சபை தேர்தல் தொடர்பில் எமது தமிழ் மக்கள் மிகவும் விழிப்பாக இருக்க வேண்டும் .இதன் ஊடாக எதுவும் செய்ய முடியாது என்று எதுவும் நினைக்கத்தேவையில்லை.

 முதலமைச்சர் வேட்பாளராக இருப்பவர் உயர் நீதிமன்ற நீதியரசர் மற்றும் இத் தேர்தல் களத்தில் பல சட்டத்தரனிகளும் களமிறங்கியுள்ளோம். எனவே இந்த 13வது திருத்தச்சட்டத்தில் என்னென்ன விடயங்கள் இருக்கு என்பதை நாம் நன்கு அறிந்திருக்கின்றோம்.

எனவே இந்த விடயத்தில் ஏனையவர்கள் கூறுவது போன்று எந்த அபிவிருத்தியையும் செய்யமுடியாது என்று கூறுகிறார்கள். அவ்வாறு நிச்சயமாக இல்லை.

இவ் மாகாணசபையில் உள்ள அதிகாரங்களை நாம் பயன்படுத்துவோமானால் குறைந்தது ஒரு 50 வீதமான அதிகாரங்களையும் உரிமைகளையும் எமக்கு பெற  முடியும்.

இதன் ஊடாக எமது மக்கள் இவ்வளவு காலம் பட்ட துயரத்திற்கு ஓரளவேனும் ஒரு உரிமையை பெற்றவர்களாக திருப்தியடையவைக்க முடியும். இந்ந மாகாண சபையில் 13 வது திருத்தச்சட்டத்தின் படி 3 நிரல்கள் இருக்கின்றது.

1.       மாகாண சபைகள் நிரல்.
2.       மத்தியரசிற்காண நிரல்.
3.       ஒருங்கிய நிரல்
எனவே இந்த பாராளுமன்றத்திற்கு அடுத்ததாக சட்டம் இயற்றக்கூடிய ஒரே ஒரு ஸ்தாபனமாக இருக்கும் இடம் இந்த மாகாணசபை. ஆனால் இந்த மாகாண சபை எவ்வளவுதான் சட்டம் இயற்றினாலும் சில சில விடயங்களில் மத்தியரசிற்கு அமைவாக செயற்படவேண்டிய ஒரு கட்டாயம் இருக்கின்றது.

அதாவது பாராளுமன்றத்தில் சட்டம் இயற்றும் போது பாராளுமன்றத்தின் சில சில விடயங்களில் பாராளுமன்றத்திற்கு அமைவாக நடக்க வேண்டிய கட்டாயம் இருக்கின்றது. இருப்பினும் இதில் இருக்கின்ற அதிகாரங்களை சரிவர பயன்படுத்தக்கூடிய வகையில் ஆட்களை தெரிவு செய்யப்பட வேண்டும் .

இதில் உள்ள உரிமைகள் என்ன என்பதை நன்கு அறிந்துகொள்ள வேண்டும். இதில் உள்ள நிதிமூலங்கள் என்ன, ஒரு நீதித்துறை ஸ்தாபிப்பது என்றால் என்ன மாகாணசபையிலுள்ள நிர்வாகத்தை எவ்வாறு கொண்டு நடாத்த வேண்டும் என்றது தொடர்பில் எல்லாம் இச் சட்டத்தில் தெளிவாக இருக்கின்றது.

வெளியில் மக்கள் சிலரின் கருத்து மாகாணசபையை கைப்பற்றினாலும் எவ்வாறான உரிமைகளையும் நாம் பெற்றுக்கொள்ள போவதில்லை என்பதுதான். அவ்வாறில்லை இருப்பினும் நிச்சயமாக இதிலுள்ள உரிமைகள் என்ன என்பதை நாங்கள் மக்களுக்கு தெளிவுப்படுத்த இருக்கின்றோம். உண்மையில் இதிலுள்ள உரிமைகள் சலுகைகளை மக்களுக்கு எடுத்துக்கொடுப்பதுக்கும் மேலாக ஒரு விடயத்தை நாம் அறிந்துகொள்ள வேண்டும்.

சர்வதேச சமூகமும் சரி எமது தமிழ் சமுகமும் சரி எமது இவ்வளவு பிரச்சினை துன்பங்களுக்கு மத்தியிலும் மாகாணசபையினூடாக பெரும்பான்மை வாக்குகளால் வெற்றியடையச் செய்து ஒரே கட்சியின் கீழ் அதாவது கூட்டமைப்பு கட்சியின் கிழ் எல்லோரும் ஒன்றுபட்ட தமிழ்மக்கள் நிற்கின்ற போது நிச்சயமாக மாகாணசபை தொடர்பான அதிகாரங்களை நாங்கள் பயன்படுத்துகின்ற போதும் ஏதேனும் மத்திய அரசினாலோ, பாராளமன்றத்தினாலோ தடைகள்வருமாயினும் நாங்கள் அதை நீதிமன்றத்தின் ஊடாக கேள்விக்குட்படுத்த முடியும்.

அதாவது அதிலுள்ள அதிகாரங்களை தடைசெய்கின்றவாறு இருந்தால் நிச்சயமாக நாங்கள் அதை எதிர்த்து போராட இருக்கின்றோம். அதற்கான சட்ட நடவடிக்கையும் எங்களால் எடுக்கமுடியும். மேலும் இந்த மாகாணசபையில் எமது ஒற்றுமை தனித்துவம் தமிழன் என்ற ஒரு அடையாளத்தை வெளிப்படுத்த போதுமாயின் எல்லோரும் எல்லா தமிழ் மக்களும் ஒன்றுபட வேண்டும்.

அதேபோன்று இன்னொரு விடயத்தையும் தமிழ் மக்களும் வடக்கில் வாழ்கின்ற முஸ்லிம் மக்களும் வடிவாக உணர்ந்து கொள்ள வேண்டும் உண்மையில் முஸ்லிம் மக்களும் இந்த யுத்தத்தினூடாக பாதிக்கப்பட்டிருக்கின்றார்கள் அதை ஏற்றுக்கொள்ள வேண்டும்.

 இருப்பினும் ஒரு அரசியல் போட்டி காரணமாக முஸ்லிம் தமிழ் புரிந்துணர்வு இல்லாமல் போகக்கூடாது.

முஸ்ஸிம் மக்கள் வாழ்கின்றார்கள் அவர்கள் அவர்களின் வீகிதாசார அடிப்படையில் அவர்களின் பிரதிநிதித்துவம் இருக்க வேண்டும். அதே போன்று எமது தமிழ் மக்களும் ஒரே கட்சியின் கீழ் எமது மக்களை பிரதிநிதித்துவப்படுத்துகின்றவாறு மக்கள் ஒன்று திரள வேண்டும்.

 உண்மையில் அவ்வாறு ஒன்று சேர்ந்து முஸ்லிம் தமிழ் ஒற்றுமைக்காக நாம் பாடுபட முடியும். இருப்பினும் இந்த தருணத்தில் எமது தமிழ் மக்களுக்கு இருக்கின்ற ஒரே ஒரு வழி அனைவரும் வாக்களிக்க வேண்டும் இவ்வறு வாக்களிப்பதன் ஊடாக நாம் தமிழன் என்ற அடையாளத்தை அரசுக்கும் சரி வெளிநாடுகளுக்கும் சரி இலங்கையில் தமிழ் மக்களுக்கு பிரச்சினை ஒன்று இருக்கின்றது என்பதனை நாம் வெளிக்காட்ட முடியும்.

அவ்வாறான பிரச்சினை இருந்ததினாலேயே இந்த உரிமைப்போராட்டம் எமக்கு இருக்கின்ற உரிமைகள் மறுக்கப்பட்டதனாலேயே இப் போராட்டம் தொடக்கப்பட்டன. ஆயதப்போர்கள் முற்றுப்புள்ளி வைக்கப்பட்டிருப்பினும் உண்மையில் எமக்கு இருக்கின்ற ஒரே ஒரு ஆயதம் சட்டம்.

 இந்த மாகாண சபையினூடாக எமது அதிகாரத்தை கைப்பற்றுவோம் அதற்கான ஆயுதமாக நாம் பயன்படுத்த வேண்டியது தற்போதைய சூழ்நிலையில் சட்டம்.

இச் சட்டத்திற்கு ஏதேனும் பாதிப்புக்கள் வருமாயின் நிச்சயமாக சர்வதேச சமுகத்திற்கு எம்மால் கொண்டுவர முடியும். மாகாணசபையை நாம் வென்றெடுத்தப்பின் இவ்வாறு சட்டத்திற்கு பிரச்சினை வருமானால் மக்கள் திரண்டுநிற்பிர்கள் அதனால் நாம் சர்வதேச சமுகத்திற்கு கொண்டு செல்வோம்.

எனவே இத்தகைய சந்தர்ப்பத்தில் நான் மக்களிடம் கேட்டுக்கொள்வது எமது மன்னார் மாவட்டத்தில் 5 உறுப்பினர்கள் தெரிவுசெய்யவேண்டி இருக்கின்றது.

எனவே நீங்கள் வாக்களிக்க வராமல் விடுவதனால், ஒரு உரிமை போராட்டத்தில் கலந்துகொள்ளாமல் எமது கட்சியை வெல்ல வைக்காது விட்டால் எமக்கு தேவையற்ற எதிரரான நபர்கள ஆட்சிக்கு வருவார்கள்.

ஆகவே தயவுசெய்து மக்கள் விழிப்புணர்வுடன் வாக்களிப்பதற்கான முயற்சியில் ஈடுபட வேண்டும். தமிழ்மக்கள் தமிழ் கட்சியான தமிழ் தேசிய கூட்டமைப்பை வெல்ல வைப்போம், முஸ்லிம் சகோதரர்கள் அவர்கள்வீதாசாரத்தின்படி அவர்கள் கட்சியை கொண்டு வரட்டும் நாங்கள்  ஒரு நல்லாட்சியை ஏற்படுத்தி எமக்குள்ள உரிமையை வென்றெடுத்து இன மத பேதமின்றி மன்னார் மாவட்ட மக்களையும் ஏனைய வடமாகாணமக்களையும் அபிவிருத்தி பாதையில் இட்டுச்செல்வதற்கான முதற் படியாக இத் தேர்தலில் நான் களமிறங்கியுள்ளேன்.

எனவே மக்களிடம் கேட்டுக்கொள்வது என்னவென்றால் தமிழ்தேசிய கூட்டமைப்புக்கும் சட்டத்தரணியாக இருக்கும் எனக்கும் வாக்களிப்பீர்கள் என நம்புகின்றேன்.

தமிழ் மக்கள் ஒரே குடையின் கீழ் இருக்கின்றார்கள் என்பதை உலக நாடு அறிந்து கொள்ள இது ஒரு நல்ல வாய்ப்பு பி. டேனிஸ்வரன். Reviewed by Admin on August 09, 2013 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.