லக்ஸபான மின்சாரம் இன்று சுன்னாகத்துக்கு; கிளிநொச்சியிலிருந்து பரீட்சார்த்த முயற்சி
எதிர்வரும் செப்ரெம்பர் மாதம் முதல் வாரத்தில் குடாநாட்டின் பெரும்பாலான இடங்களுக்கு 24 மணி நேர மின்விநியோகம் தடையின்றி மேற்கொள்ளப்படும் என்று இலங்கை மின்சார சபையின் வடமாகாணப் பிரதிப் பொது முகாமையாளர் குணதிலக தெரிவித்தார். யாழ்ப்பாணப் பிரதேச பணி மனையில் நேற்று நடந்த செய்தியாளர் சந்திப்பிலேயே அவர் இதனைத் தெரிவித்தார்.
அங்கு அவர் மேலும் தெரிவித்ததாவது: 1990 ஆம் ஆண்டு தடைப்பட்ட லக்ஸபான மின் விநியோகமே இன்று யாழ். மாவட்டத்துக்குப் பரீட்சார்த்தமாக வழங்கப்படுகிறது. வடமாகாணம் இதுவரை நாட்டின் ஏனைய பகுதிகளுக்கான மின்மார்க்க வலைப் பின்னலுடன் இணைக்கப்பட்டிருக்கவில்லை.
132 கிலோ வோல்ட் மின்சாரம் கிளிநொச்சியிலிருந்து சுன்னாகத்துக்கு வழங்கப்படுவதன் மூலம் வடமாகாணமும் தேசிய மின்மார்க்கத்தினுள் இணைக்கப்பட்டு 24 மணி நேரம் மின்சாரத்தை பெறவுள்ளது. கிளிநொச்சியிலுள்ள பிரதான மின் நிலையத்திலிருந்து புதுக்காடு ஊடாக குடாநாட்டின் சில பகுதிகளுக்கு தற்போது லக்ஸபான மின்சாரம் வழங்கப்படுகிறது.
33 கிலோ வோல்ட் மின்சாரம் இவ்வாறு வழங்கப்படுகிறது. கிளிநொச்சியிலிருந்து பரந்தன், ஆனையிறவு, இயக்கச்சி, கோயில்வயல், சோரன்பற்று, மிருசுவில், எருவன், கொடிகாமம், வரணி, மந்துவில், சரசாலை, மட்டுவில், புத்தூர் கிழக்கு, சிறுப்பிட்டி, அச்செழு, போயிட்டி, நீர்வேலி, ஊரெழு ஊடாக சுன்னாகம் மின்நிலையத்துக்கு இந்த அதியுயர் மின்மார்க்கம் ஊடாக மின்சாரம் வழங்கப்படவுள்ளது. இத்தகைய மின்மார்க்க கோபுரங்களை அண்மித்துள்ளவர்கள் கோபுரங்களிலிருந்து விலகி அவதானமாக இருக்க வேண்டும் - என்றார்.
லக்ஸபான மின்சாரம் இன்று சுன்னாகத்துக்கு; கிளிநொச்சியிலிருந்து பரீட்சார்த்த முயற்சி
Reviewed by Admin
on
August 16, 2013
Rating:

No comments:
Post a Comment