நம்மவர் தேர்தல் காலம் ?
ஆவலாய் விவசாயி வெளியே ஓடிவந்து
வானத்தை எட்டிப்பார்க்கின்றான்
தடம் மாறிவரும் பேரூந்து போல
பருவம் தப்பி போடும் தூரல் மீது
நம்பிக்கையின்றி அண்ணார்ந்து பார்த்து
தன்னுள்ளே சிரித்துக்கொண்டான்
இதுவொன்றும் மழைக்காலம் அல்ல
அவலையும்,ஆவலையும் தந்து நிற்கும்
நம்மவர் ''தேர்தல்" காலம் ?
அனல் காற்று அள்ளி எறியும்
புழுதித்துகள்களும், புழுக்கமும்
கத்திரி வெய்யிலின் வெட்கையை
தணிக்க முற்றத்து மாவிற்கும்,வேம்பிற்கும்
கீழே உட்கார்ந்து வானத்தை எட்டிப்பார்த்த
அந்த நொடிப் பொழுதுகளில்
ஏழையின் எண்ணத்தில் ஓடிய
எதையோ ஒன்றை நினைத்து
மனசிற்குள் அடக்க முடியாது
சிரித்துக்கொண்டே இது என்ன வெய்யில் காலமோ ?
இல்லை சோதனைகளுக்கு முடிவில்லா
கண்ணீருக்கும்,செந்நீருக்கும் நடுவில்
நம்மவர் ''தேர்தல்'' காலம் ?
மழையும் முடிந்து வெய்யிலும் போய்
கனத்த மனங்களில் மெல்ல நம்பிக்கையை
தூதனுப்பி கனியும் நாட்களை கைகாட்டி
அறுவடை முடித்த கையோடு
ஆடித்திருவிழாவும், ஆவணித்தேரிழுப்பும்
கவலை கலைத்து கடந்தேறிக்கண்டதைப் பேசி
கனவுலகில் வாழ்கின்றோமோ என்றெண்ண
வைத்து நிற்கும் வசந்த காலமோ ?
இல்லை உடலழிந்து,உயிர் பிரிந்த பின்னரும்
வெறுமைகளை கையிலேந்திய வண்ணம்
காத்திருக்கும் உறவுகளின் நடுவில்
நம்மவர் ''தேர்தல்'' காலம். ?
இரவுக்குளிர் மெதுவாக
இதயத்தை ஊடறுத்துப்பாயும்
இனம்புரியா ஏதோ ஒன்றால்
உள்ளமும் உடலும் போர்வைக்குள் தூங்கும்
அதிகாலைப்பனியில் நனைந்த
புற்களும்,பூக்களும் நம்மீது படுகையில்
அளவு கடந்த ஆனந்தம்
அலையில்லாக்கடலில் பயணிப்பது போல
அப்படியொரு திருப்தி தோனும்
இது என்ன குளிர்காலமா,பனிக்காலமா ?
இல்லை உணர்வாலும்,உள்ளத்தாலும்
உறைந்து போய் நிற்பவர் நடுவில்
நம்மவர் ''தேர்தல்'' காலம் ?
சந்துரு
மன்னார்.
நம்மவர் தேர்தல் காலம் ?
Reviewed by Admin
on
August 11, 2013
Rating:
No comments:
Post a Comment