இலங்கையில் புகைப்பவர்களின் எண்ணிக்கை 7 வீதத்தினால் குறைவு : சுகாதார அமைச்சு
மூதாதையர்களிடையே அதிகளவில் புகையிலைப் பாவனை காணப்பட்டது. எனினும் தற்போதைய இளைஞர்கள் மத்தியில் புகையிலைப் பாவனை வெகுவாகக் குறைந்துள்ளது. தற்போது சிகரெட்டுக்களின் விலை உயர்வும் மக்கள் மத்தியில் குறிப்பாக இளையோர் மத்தியில் ஏற்படுத்தப்பட்ட விழிப்புணர்வு மற்றும் புகைத்தலுக்கு எதிரான செயற்றிட்டங்களின் ஊடாக மக்களைத் தெளிவு படுத்தியமையும் புகைத்தல் பாவனை குறைவடைவதற்கு முக்கிய காரணமாகும் எனவும் அமைச்சு சுட்டிக் காட்டியுள்ளது.
இதேவேளை, இலங்கையில் ஒரு நாளைக்கு சுமாராக ஆயிரம் பேர் இறக்கின்றனர். இதில் குறைந்தது 650 பேர் இவ்வாறான புகைத்தல் மற்றும் மதுபான பாவனையினால் இறக்கின்றனர் எனவும் சுகாதார அமைச்சு தகவல் வெளியிட்டுள்ளது.
இலங்கையில் புகைப்பவர்களின் எண்ணிக்கை 7 வீதத்தினால் குறைவு : சுகாதார அமைச்சு
Reviewed by Admin
on
August 16, 2013
Rating:

No comments:
Post a Comment