இன, மத, பால் ரீதியாக பாடசாலைகள் இனி இல்லை; கல்வி அமைச்சர் பந்துல தெரிவிப்பு
ஆனால் ஏற்கனவே இயங்கி வரும் பாடசாலைகள் தொடர்ந்தும் செயற்படும். இவ்வாறு கூறினார் கல்வி அமைச்சர் பந்துல குணவர்த்தன.
சமூக ஒருமைப்பாட்டுக்கான தேசிய கொள்கையில் கல்விக்கான அணுகுமுறை பற்றிய இரண்டாவது கலந்துரையாடல் கொழும்பு லக்ஷ்மன் கதிர்காமர் நிலையத்தில் நடைபெற்றது.
அங்கு அமைச்சர் கலந்து கொண்டு உரையாற்றுகையில் கொழும்பு சாஹிராக் கல்லூரி, ஆனந்தாக் கல்லூரி, பம்பலப்பிட்டி இந்துக் கல்லூரி போன்ற பாடசாலைகளிலும் மூவின மக்களும் கல்வி கற்கும் வசதிகள் நடைமுறைப்படுத்தப்படவுள்ளன.
அத்துடன் நாடு முழுவதிலும் ஐநூறு தொழில்நுட்பப் பாடசாலைகளையும் ஆரம்பிக்கவுள்ளோம்.-என்றார்.
தேசிய மொழிகள் மற்றும் சமூக ஒருமைப்பாட்டு அமைச்சர் வாசுதேவ நாணயக்கார, கல்வி அமைச்சின் செயலாளர் அனுரதிஸநாயக்க ஆகியோரும் நிகழ்வில் கலந்து கொண்டனர்.
இன, மத, பால் ரீதியாக பாடசாலைகள் இனி இல்லை; கல்வி அமைச்சர் பந்துல தெரிவிப்பு
Reviewed by Admin
on
August 23, 2013
Rating:
No comments:
Post a Comment