இலங்கையில் 20 வீதமானோர் மனநோயினால் பாதிப்பு
பாதிக்கப்பட்டவர்கள் பல்வேறுபட்ட சமூக ரீதியான காரணங்களால் தமது நோய்க்கான சிகிச்சையினை பெற மறுக்கின்றனர் எனவும் மனநோய் ஆய்வு நிலையம் தெரிவித்துள்ளது. இது தொடர்பாக மனநோய் ஆய்வு நிலையத்தின் பணிப்பாளர் ஜயான் மெண்டிஸ் கருத்துத் தெரிவிக்கையில் இலங்கையில் இன்று வரையில் மனநோயினால் குறிப்பிட்ட சனத்தொகையினர் பாதிக்கப்பட்டு வருகின்றனர். எனினும் இவர்களில் 60 வீதமானோர் தமது நோய்க்கான சிகிச்சைகளை பெற மறுக்கின்றனர்.
குறிப்பாக சமூகத்தில் தமக்கான நிலை மாறுபடும் தாம் நோயாளர் என்பதை தெரிந்து கொள்வர் என்ற காரணத்தினால் அதிகமான மனநோயாளர்கள் சிகிச்சை பெற விரும்புவதில்லை. நோயாளர்களில் 5வீதமானோர் கடுமையான மனநோய் பாதிப்பிற்கு உள்ளாகியுள்ளனர். எனவே நோய்க்கான சரியான சிகிச்சை முறைமைகளை மேற்கொள்ளவேண்டும் எனவும் அவர் தெரிவித்தார்.
இலங்கையில் 20 வீதமானோர் மனநோயினால் பாதிப்பு
Reviewed by Admin
on
August 23, 2013
Rating:
.jpg)
No comments:
Post a Comment