வடக்கில் இருந்து இராணுவத்தை வெளியேற்ற ஆணையிடுங்கள்-மன்னாரில் சீ.வி.விக்னேஸ்வரன்.
தமிழ் தேசியக்கூட்டமைப்பின் மன்னார் மாவட்டத்திற்கான முதலாவது மாபெரும் பிரச்சாரக்கூட்டம் நேற்று முன் தினம் செவ்வாய்க்கிழமை (27-08-2013) மாலை மன்னார் பொது விளையாட்டு மைதானத்தில் இடம் பெற்றது.இதன் போது உரையாற்றுகையிலேயே அவர் அவ்வாறு தெரிவித்தார்.
அவர் அங்கு தொடர்ந்து உரையாற்றுகையில்,,,,,,,
இது ஒரு முக்கியமான தேர்தல். இந்த தேர்தலில் தமிழ் மக்களுடைய அபிலாசைகள் என்ன?எதிர்பார்ப்புக்கள் என்ன?எதனை அவர்கள் தம்முடைய குறிக்கோளாக வைத்திருக்கின்றார்கள் என்பதையெல்லாம் பிரதிபலிக்கும் ஒரு விதமாக எங்களுடைய இந்த தேர்தல் அமைகின்றது.ஆகவே உங்களுடைய வாக்கு மிக மிக முக்கியமானது.
ஆனால் அதே நேரத்தில் எமக்கு எதிர் கட்சியாகிய அரசாங்கத்துடன் சேர்ந்த கட்சிகள் சம்பந்தமாகவும் கூறவேண்டியுள்ளது.
காரணம் அவர்கள் தான்தோன்றித்தனமாக நடந்து கொள்ளுகின்றார்கள்.ஒருவர் மன்னார் மாவட்டத்தில் தான்தோன்றித்தனமாக நடந்து கொள்ளுகின்றார். யாழ்ப்பாணத்தில் இருவர் தான்தோன்றித்தனமாக நடந்து கொள்ளுகின்றனர்.
இவர்களுடைய நடவடிக்கைகளை பார்த்தால் ஏதோ தங்களுக்கு எல்லாவிதமான உரித்துக்களும் இருக்கின்றது.தாங்கள் நினைத்த மாதிரி எதுவும் செய்ய முடியும் என்ற எண்ணத்தில் அவர்கள் பலம் பெறுகின்றனர்.
ஆனால் உண்மை என்ன? அவர்களை ஆட்டிப்படைக்கின்றவர் கொழும்பில் இருக்கின்றார்.
இவர்கள் ஆட்டிப்படைக்கப்படும் வெறும் பொம்மைகள் தான். இவர்களுடைய பொம்மலாட்டத்தை எந்த நேரத்திலும் அங்குள்ளவரால் நிறுத்த முடியும்.
ஆகவே அவர்களினால் அதிகம் செய்ய முடியாது.என்றாலும் சட்டத்திற்கு எதிராகவும்,நீதிக்கு எதிராகவும் பலவித பிழையான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
தமிழ்,முஸ்லிம் மக்களுக்கு இடையில் பிரச்சினைகளை ஏற்படுத்துகின்றார்கள்.ஆனால் எல்லாமே அங்கிருந்து கூறுவதை இங்கிருந்து செய்வதாக எமக்குத்தெரிகின்றது.
இந்த தேர்தல் ஏன் இவ்வளவு முக்கியத்துவம் வாய்ந்தது என்றால் எங்களுடைய வாழ்க்கை, வாழ்க்கையினுடைய நிலை மாற்றமடையப்போகின்றது.
இது வரை காலமும் நாங்கள் மாவட்டம் ரீதியாகவும்,பிரதேசங்கள் ரீதியாகவும் பேசிக்கொண்டிருந்தோம்.முதல் முதலாக எங்களை மாகாண ரீதியாக ஒரு அலகாக சட்டம் எங்களை பார்க்கின்றது.
அந்த சட்ட பார்வையின் நிமித்தம் எங்களுக்கு ஒரு ஜனநாயக முறைப்படி தேர்தல் ஒன்றை நடத்தி எங்களுடைய அபிலாசைகளை சட்டப்படி எடுத்துக்காட்ட ஒரு சந்தர்ப்பம் கிடைத்துள்ளது.
முக்கியமான விடயம் என்னவென்றால் மன்னார், வவுனியா,முல்லைத்தீவு,கிளிநொச்சி,யாழ்ப்பாணம் ஆகிய 5 மாவட்டங்களையும் ஒன்றிணைத்து ஒரு அலகாக வடமாகாணம் என்று சட்டம் பார்க்கின்றது.
வடமாகாணத்திற்கு தேர்தல் நடந்தால் நாங்கள் ஒரு அலகுக்குரியவர்கள்.நீங்கள் மன்னார் மாவட்ட தமிழர்கள் அல்ல. யாழ் மாவட்ட தமிழர்கள் இல்லை.அனைவரும் ஒட்டுமொத்தமாக வடமாகாண தமிழர்கள்.
எனவே வடமாகாணத்தமிழர்கள் அனைவரும் ஒட்டமொத்தமாக ஒருமித்து எங்களை வடமாகாண சபைக்கு அனுப்பப்போகின்றீர்கள்.அந்த வகையிலே சகல தமிழ் பேசும் முஸ்லிம்கள்,இந்துக்கள்,கிறிஸ்தவர்கள் ஏன் தமிழ் பேசும் பௌத்தர்கள் அனைவரும் எங்களுடைய சகோதரர்கள் என்ற வகையில் ஒற்றுமையை ஏற்படுத்தப்போகின்றது இந்த மாகாணசபை.
இது ஒரு ஜனநாயக முறைப்படி நடக்கப்போகும் ஒரு தேர்தல்.
சட்டப்படி ஜனநாயக முறைப்படி இன்றிலிருந்து எதிர்வரும் 21 ஆம் திகதிக்கிடையில் மக்களுக்கிடையில் பிரச்சினையை ஏற்படுத்தி அவசர காலச்சட்டத்தை ஏற்படுத்தி தேர்தல் நடக்காது இருக்க எதாவது நடவடிக்கை எடுக்கப்படுமோ என்று எனக்குத்தெரியாது.
தேர்தல் நடந்தால் அது ஜனநாயக முறைப்படி நடக்கும்.ஜனாநாயக முறைப்படி நடக்கும் ஒரு தேர்தல் என்ன அவ்வளவு பெரிய விடயம் என்று கேட்டிர்களானால் ஆயுதம் ஏந்தி எங்களுடைய தம்பிமார்கள் போராடிய போது வெளிநாட்டு அரசாங்கமும்,எங்களுடைய அரசாங்கமும் என்ன சொன்னார்கள் என்றால் இவர்கள் பலாத்காரத்தின் அடிப்படையில் வன்முறையின் அடிப்படையில் தலைமைத்துவத்தை தன்வசம் எடுத்து வைத்திருக்கின்றார்கள்.
இவர்கள் ஜனநாயக முறைப்படி வந்தவர்கள் அல்ல என்று.
ஆகவே அதன் காரணத்தினால் ஜனாநாயக முறைப்படி எம்மை தேர்ந்தெடுத்ததன் பின் நாங்கள் பேசும் பேச்சு தமிழ் மக்களின் குரலாக அது அமையும்.
அந்த விதத்திலே இது ஒரு ஜனநாயக நடவடிக்கை,செயற்பாடாக அமையும்.அந்த வகையிலே ஒரு அலகாக தமிழ் மக்கள் ஒன்று சேர்ந்து இந்த தேர்தலில் செயல்பகின்றார்கள்.
அவர்கள் ஜனநாயக முறைப்படி செயல்படுகின்றார்கள் .எங்களுடைய தீர்ப்பு எனவே அரசாங்கத்திற்கும் மற்றைய நாடுகளுக்கும் ஏற்றுக்கொள்ளக்கூடியதாக இருக்கப்போகின்றது.
இவ்வாறு நாங்கள் ஏற்றுக்கொள்ளப்பட்டதன் பின் எமக்கு இருக்கும் பலம் என்ன என்று பார்த்தால் நீங்கள் மூன்றில் இரண்டு பங்கு பெரும்பான்மையை எங்களுக்கு வழங்கினீர்கள் ஆனால் சட்டப்படி ஆளுனருக்கு எதிராக நம்பிக்கை இல்லாத்தீர்மானம் கொண்டு வர முடியும்.
நீங்கள் ஏகோபித்து எங்களை மூன்றில் இரண்டு பெரும்பான்மைக்கு மேல் எங்களை தேர்ந்தெடுத்தீர்கள் என்றால் இராணுவமே வெளியேறு என்று கூற முடியும்.
இது வரை காலமும் எங்களை பாதுகாப்பதற்காக இராணுவம் இருப்பதாக கூறிக்கொண்டு வரும் அரசாங்கத்திற்கு எங்களுக்கு தேவையில்லை உங்கள் இராணுவம் எடுத்துச் செல்லுங்கள் இராணுவத்தை என்று கூறுவதற்கு ஒரு பலத்தை அழிக்க வேண்டும்.
இந்த தேர்தல் முக்கியமானது.நீங்கள் எதிர் கட்சிகளுக்கு உங்கள் ஆதரவை வழங்கினீர்கள் ஆனால் நீங்கள் அடி வருடிகள் என்ற வகையில் உங்களால் எதனையும் கேட்க முடியாது.
அரசாங்கத்தில் உள்ள அமைச்சர்களினால் கூட இராணுவத்திற்கு எதிராக ஒன்றும் செய்ய முடியாத நிலை உள்ளது.மன்னார் மாவட்டத்தில் மீன் பிடியில் பிரச்சினைகள் உள்ளது.
அதனை தீர்த்து வைக்க வேண்டும்.நாங்கள் ஆட்சிக்கு வந்தால் அரசாங்கத்துடனோ அல்லது இந்திய அரசாங்கத்துடன் பேசி இதற்கு திருப்தியான ஒரு தீர்வை கொண்டு வர இருக்கின்றோம்.
இதே போன்று தான் பலவிதமான பிரச்சினைகளில் தமிழ் மக்கள் இருக்கின்றார்கள்.
ஆகவே உங்களுடைய அன்பும்,ஆதரவும் கிடைத்தால் தான் எம்மால் எதுவும் செய்ய முடியும்.எனவே தமிழ் தேசியக்கூட்டமைப்பிற்கு உரிய முறையில் வாக்களித்து உங்கள் உள்ளக்கிடக்கைகளை வெளிப்படுத்த எங்களுக்கு உங்கள் ஆதரவை தாருங்கள் .என தெரிவித்தார்.
வடக்கில் இருந்து இராணுவத்தை வெளியேற்ற ஆணையிடுங்கள்-மன்னாரில் சீ.வி.விக்னேஸ்வரன்.
Reviewed by Admin
on
August 29, 2013
Rating:
No comments:
Post a Comment