வன்னேரிக்குளம் பிரதேசதிற்கு குடிநீர் திட்டம் (படங்கள் )
யப்பானிய அரசின் ஜெய்கா திட்டத்தின் கீழ் வன்னேரிக்குளம் பிரதேசத்தில் திக்காய்,சோலை,குஞ்சுகுளம்,ஜயனார்புரம் பிரதேசங்களுக்கு குடிநீர் வழங்கும் வகையில் திட்ட மதிப்பீடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது திக்காய் குஞ்சுகுளம் பிரதேசங்கள் உவராகி வருகின்றமையினால் மேற்படி பிரதேசங்களில் வாழும் மக்கள் நீண்ட காலமாக குடிநீர் பிரச்சினைகளை எதிர்கொண்டு வந்துள்ளனர்
அந்த வகையில் பாராளுமன்ற உறுப்பினர் சந்திரகுமார் அவர்களின் முன்மொழிவுக்கு அமைவாக மேற்படி குடிநீர் விநியோக திட்டம் ஆரம்பிக்கப்படவுள்ளது தொடர்பான கள நிலைமைகளை ஆராயும் வகையில் ,நேற்று மேற்குறித்த பிரதேசங்களுக்கு கட்டட திணைக்களத்தின் பிரதிப்பணிப்பாளர் எஸ் சுந்தரகுமார் பாராளுமன்ற உறுப்பினர் சந்திரகுமார் அவர்களின் அலுவலக உத்தியோகத்தர்கள் உள்ளுராட்சி உதவி ஆணையாளர் அலுவலக சமூக அபிவிருத்தி உத்தியோகத்தர்,தொழிநுட்ப உத்தியோகத்தர் ஆகியோர் அடங்கிய அதிகாரிகள் நேரில் சென்று நீர் பெறும் ,இடங்கள் மற்றும் குழாய் வழி குடி நீர் கொண்டு செல்லவேண்டிய பிரதேசங்கள் என்பவற்றை பார்வையிட்டு திட்ட மதிப்பீடுகளை மேற்கொண்டள்ளனர்
,இந்த திட்ட மதிப்பீடுகள் பூர்த்தி அடைந்து அறிக்கைகள் சமர்பிக்கப்பட்டு அனுமதி கிடைத்தவுடன் பணிகள் ஆரம்பிக்கப்படவுள்ளது ,இதன் மூலம் ,இந்த பிரதேச மக்கள் நீண்ட காலம் எதிர்நோக்கி வந்த குடிநீர் பிரச்சினைக்கு முற்றுபுள்ளி வைக்கப்படும்
வன்னேரிக்குளம் பிரதேசதிற்கு குடிநீர் திட்டம் (படங்கள் )
Reviewed by Admin
on
August 01, 2013
Rating:
No comments:
Post a Comment