நாணயத் தாள்களை இணைக்கும் பரீட்சாத்திகளுக்கு எதிராக நடவடிக்கை
கடந்த முறை நடைபெற்ற பரீட்சையின் பல விடைத்தாளுடன் 5000 ரூபா பண நோட்டுக்கள் இணைக்கப்பட்டிருந்தது.அதுமட்டுமல்ல. மிகவும் மனமுருகக் கூடியவாறு வசனங்களையும பரீட்சார்த்திகள் எழுதியிருந்தனர்.
இவ்வாறு செய்வதால் எவரும் சித்தியடையப் போவதில்லை. விடைத்தாள்களை நன்கு படித்து விளங்கிக் கொண்ட பின்னர் பதில் அளித்தால் மட்டுமே போதுமானது என்றும் தெரிவித்தார்.
விடைத்தாளுடன் இணைக்கப்படும் ரூபா நோட்டுக்கள் அரசின் கணக்கில் வைப்பிலிடப்படுமே தவிர பரீட்சார்த்திக்கு எதுவும் நடைபெறப் போவதில்லை.சில பரீட்சார்த்திகள், தங்களுடைய கஷ்டங்கள் எல்லாவற்றையும் எழுதி இருப்பார்கள்.
ஆனால் ஒரு கேள்விக்கும் பதில் எழுதி இருக்க மாட்டார்கள். அவர்கள் இவ்வாறு பணத்தை இணைப்பதால் எவரும் சித்தியடையப் போவதில்லை என்றும், இந்த நிலையை பரீட்சார்த்திகள் தொடர வேண்டாம் என்றும் அவர் கேட்டுக் கொண்டார்.
நாணயத் தாள்களை இணைக்கும் பரீட்சாத்திகளுக்கு எதிராக நடவடிக்கை
Reviewed by Admin
on
August 01, 2013
Rating:

No comments:
Post a Comment