அண்மைய செய்திகள்

recent
-

மன்னார் மீள்குடியேற்றப்பட்ட முஸ்லிம்களின் இருப்பிடங்களை அமைத்துக் கொள்வதற்கு முஸ்லிம் காங்கிரஸ் ஒரு செங்கல்லையேனும் கொடுக்கவில்லை -றிப்கான் பதியுதீன்

மன்னார் மாவட்டத்தில் மீள்குடியேற்றப்பட்ட மக்களின் இருப்பிடங்களை அமைத்துக் கொள்வதற்கு  இதுவரை காலமும் முஸ்லிம் காங்கிரஸ் ஒரு செங்கல்லையேனும் பெற்றுக்கொடுத்திருந்தால் அதனை அவர்கள் நிரூபித்துகாட்டட்டும் என சவால்விடுத்துள்ள மன்னார் மாவட்டத்தில் ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பில் முதன்மை வேட்பாளராக போட்டியிடும் றிப்கான் பதியுதீன்,  வடக்கு முஸ்லிம்கள் குறித்து பேசுவதற்கு முஸ்லிம் காங்கிரசுக்கு எந்த அருகதையும் கிடையாது இதுவரை காலமும் எம் மக்களின் நலன்கள் மீது எவ்வித அக்கறையும் செலுத்தாது தேர்தல் காலங்களில் மட்டும் வெட்கமில்லாமல் வாக்கு கேட்டு வருகின்றனர் எனவும் கூறினார்.

மன்னார்; முசலியில்  நடைபெற்ற தேர்தல் பிரசார கூட்டத்தில் கலந்து கொண்டு உரையாற்றும் போது மேற்கண்டவாறு தெரிவித்தார். 

அவர் தொடர்ந்து பேசுகையில்' வடக்கு முஸ்லிம்களுக்கு முஸ்லிம் காங்கிரஸ் நல்லது செய்ய நினைத்தால் அல்லது எங்களது நலன்களில் அக்கறை கொண்டிருந்தால் இத்தேர்தலிலிருந்து ஒதுங்கிக்கொள்ளட்டும் அதுவே எமக்கு செய்யும் பேருதவியாகும்.

 மன்னார் மாவட்டத்தில் முஸ்லீம்களின் வாக்குப்பலம் சொற்பமானதாகும் தனது சுய லாபத்திற்காக மக்களின் வாக்குகளை பிரித்து பிரதிநிதித்துவத்தை இல்லாமல் ஆக்கச்செய்வதுதான் முஸ்லிம் காங்கிரஸின் நோக்கம் இதற்கு மக்கள் ஒரு  போதும்  இடம் தர மாட்டோம்.

மன்னார் மாவட்டத்தின் மீள்குடியேற்றபப்பணிகள் வேலை வாய்ப்புகள் மற்றும் உட்கட்டுமான வசதிகள் போன்ற இன்னோரன்ன பல மக்கள் சேவை பணிகளில் முஸ்லிம் காங்கிரஸ் என்ன செய்திருக்கிறது. அமைச்சர் றிசாத் பதியுதீன் மக்கள் சேவைப்பணிகளை பொறுத்துக்கொள்ள முடியாமல் முஸ்லிம் காங்கிரஸ் இவ்வாறான பொறுப்பற்ற கதைகளை அரசுக்கு எதிராக பிரசாரம் செய்யும் பணிகளில்  வேலைகளில் ஈடுபட்டு வருகின்றது. என்றும்  அவர் மேலும் தெரிவித்தார்.


மன்னார் மீள்குடியேற்றப்பட்ட முஸ்லிம்களின் இருப்பிடங்களை அமைத்துக் கொள்வதற்கு முஸ்லிம் காங்கிரஸ் ஒரு செங்கல்லையேனும் கொடுக்கவில்லை -றிப்கான் பதியுதீன் Reviewed by Admin on August 28, 2013 Rating: 5

1 comment:

Unknown said...
This comment has been removed by the author.
Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.