அண்மைய செய்திகள்

recent
-

யூசிமாஸ் அபாகஸ் நிறுவனத்தின் ஆறாவது ஆண்டு பரிசளிப்பு விழா(படங்கள் )

மன்னார் மாவட்டத்தில் கடந்த ஆறு ஆண்டுகளுக்கு மேலாக மிகச் சிறந்த முறையில் யூசிமாஸ் அபாகஸ் பயிற்சி வகுப்பை நடத்திவரும் மன்னார் யூசிமாஸ் அபாகஸ் நிறுவனத்தின் ஆறாவது ஆண்டு பரிசளிப்பு விழா கடந்த 10.08.2013 அன்று மன்னார் நகர மண்டபத்தில் பி.பகல் 2.30 மணியளவில் அதன் நிர்வாகி திரு. ந.கேதீஸ்வரன் அவர்களின் தலைமையில் ஆரம்பித்து மாலை 6.00 மணியளவில் நிறைவுபெற்றது. 

 இவ்விழாவிற்குப் பிரதம விருந்தினராக மன்னார் வலயக்கல்விப் பணிப்பாளர் திரு.எம்.எம்.சியான் அவர்களும் கௌரவ விருந்தினர்களாக பேசாலை புனித மேரி பெண்கள் வித்தியாலய அதிபர் திருமதி. கிறிஸ்ரினா குரூஸ் அவர்களும் யூசிமாஸ் அபாகஸ் கொழும்பு தலைமையலுவலகத்திலிருந்து வருகைதந்த Chief Moderator திருமதி. இலமநாதன் சித்ரா அவர்களும் கலந்து சிறப்பித்தனர்.

 இவ்விழாவில் எழுத்தூர்,மூர்வீதி, பள்ளிமுனை,வங்காலை, பேசாலை ஆகிய இடங்களில் உள்ள யூசிமாஸ் அபாகஸ் பயிற்சி நிலையங்களில் பயிற்சி நெறிகளைக் கற்கும் மாணவர்களுக்குச் சான்றிதழ்களும் வெற்றிக்கிண்ணங்களும் வழங்கிக் கௌரவிக்கப்பட்டன. 

 அத்துடன் இப்பயிற்சி நெறியைக் கற்றுக்கொண்டிருக்கும்போது கடந்த வருடம் ஐந்தாம் தரப்புலமைப் பரிசில் பரீட்சையில் 186 புள்ளிகளைப் பெற்று மன்னார் மாவட்டத்தில் முதலிடத்தைப் பெற்ற செல்வன். நிதுர்சன் அலோசியன் டயஸ் என்பவருக்குச் சிறப்பு நினைவுச் சின்னமும் வழங்கிக் கௌரவிக்கப்பட்டது இங்கு குறிப்பிடத்தக்கது. இவ்விழாவிற்கு ஏராளமான பெற்றோர்களும் நலன்விரும்பிகளும் வருகை தந்திருந்தனர்.






யூசிமாஸ் அபாகஸ் நிறுவனத்தின் ஆறாவது ஆண்டு பரிசளிப்பு விழா(படங்கள் ) Reviewed by NEWMANNAR on August 27, 2013 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.