அண்மைய செய்திகள்

recent
-

மன்னார் நீதிமன்றத்தினால் 8 இராமேஸ்வர மீனவர்கள் விடுதலை-41 மீனவர்கள் விளக்கமறியலில்.-2ஆம் இணைப்பு

இலங்கை கடற்படையினரினால் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த  49 இராமேஸ்வர மீனவர்களில் 8 மீனளவர்களை மன்னார் மாவட்ட நீதவான் ஆனந்தி கனகரட்ணம் இன்று  வெள்ளிக்கிழமை விடுதலை செய்தார்.

விடுதலை செய்யப்பட்ட குறித்த 8 மீனவர்களும் இரண்டு படகுகளில் கடந்த யூலை மாதம் 15 ஆம் திகதி இலங்கை கடல் எல்லைக்குள் அத்துமீறி நுழைந்து மீன்பிடியில் ஈடுபட்டுக்கொண்டிருந்த  போது கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த மீனவர்கலே இவ்வாறு விடுதலை செய்யப்பட்டனர்.

ஏற்கனவே கைது செய்யப்பட்ட 41 மீனவர்களையும் தொடர்ந்தும் விளக்கமறியலில் வைக்குமாறு நீதவான் உத்தரவிட்டார்.

குறித்த 49 மீனவர்கள் சார்பாகவும் மன்னார் மாவட்ட சிரேஸ்ட சட்டத்தரணி பா.டெனிஸ்வரன் மற்றும் சட்டத்தரணி ரி.வினோதன் ஆகியோர் ஆஜராகி அவர்களை விடுதலை செய்து இலங்கை கடற்படையூடாக இந்திய கடற்படையினரிடம் ஒப்படைக்குமாறு கோரியதற்கிணங்க நீதிபதி அவர்கள் குறித்த 8 மீனவர்களை விடுதலை செய்ததோடு  ஏனைய 41 மீனவர்களை எதிர்வரும் 22 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிட்டார்.


குறித்த மீனவர்கள் சார்பாக மன்றில் ஆஜரான சிரேஸ்ட சட்டத்தரணி பா.டெனிஸ்வரன் தெரிவிக்கையில்,,,

மேற்பட்டி வழக்கு இன்றைய தினம் (16-08-2013) நீதிமன்றத்தில் அழைக்கப்பட்ட போது தலைமன்னார் பொலிஸார் சட்டமா அதிபரின் அறிவித்தல்களுக்கு அமைவாக   8 மீனவர்களை மட்டும் விடுவிக்குமாறும் ஏனையவர்களுக்கு எதிராக  குற்றப்பத்திரத்தினை தாக்கல் செய்தனர்.

அப்போது குறித்த மீனவர்கள் சார்பாக ஆஜராகிய சட்டத்தரணிகளாகிய நாங்கள் மேற்படி குற்றத்திற்கூறியவர்கள் சுற்றவாழி எனக்கூறி வழக்கினை எதிர்வரும் 22 ம் திகதிக்கு மீண்டும் அழைக்குமாறு தெரிவித்தனர்.

 மேலும் இலங்கை அரசு தற்போழுது ஒருபோதும் இல்லாத வாறு புதியதொரு நடவடிக்கையினை மேற்கொள்ளுகின்றனர்.

குறிப்பாக கடந்த காலங்களில் இந்திய மீனவர்களை கைது செய்த இலங்கை அரசு அவர்களை நீதிமன்றத்தினூடாக இந்திய கடற்படையிடம் கையளிப்பதே வழமையாக கொண்டிருந்தனர்.

இருப்பினும் தற்பொழுது சட்டமா அதிபரின் நடவடிக்கையானது கைது செய்யப்பட்ட இந்திய மீனவர்களை வெகுவாக பாதிக்கினற ஒரு நடவடிக்கையாக இருப்பதாக  மீனவர்கள் சார்பாக மன்றில் ஆஜரான சிரேஸ்ட சட்டத்தரணி பா.டெனிஸ்வரன் மேலும்  தெரிவித்தார்.
மன்னார் நீதிமன்றத்தினால் 8 இராமேஸ்வர மீனவர்கள் விடுதலை-41 மீனவர்கள் விளக்கமறியலில்.-2ஆம் இணைப்பு Reviewed by Admin on August 16, 2013 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.