தமிழ் தேசியக் கூட்டமைப்பிற்கு எதிராக வடக்கில் துண்டுப்பிரசுரம்
போரால் பாதிக்கப்பட்ட மக்கள் இயக்கம்,ஜனநாயக ஜக்கிய முன்னனி என்னும் கட்சியின் பெயரில் வடபகுதியில் தேர்தலில் போட்டியிடுகின்றது. இக் கட்சியே இரட்டை இலை சின்னத்தில் தமிழ் தேசியக் கூட்டமைப்பு என்னும் பெயரில் போட்டியிடுவதாக அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பாக அந்த துண்டுப்பிரசுரத்தில் மேலும் குறிப்பிடுகையில்,,,,,
தமிழ் தேசியப்பற்றாளர்களின் ஒற்றுமையான சக்தியாக விளங்கும் தமிழ்த்தேசியக்கூட்டமைப்பு யுத்தத்தால் பாதிக்கப்பட்ட தமிழ் மக்களின் விடிவுக்காகவும்,சுதந்திரத்திற்காகவும் ,தமிழர் தந்தை செல்வாவின் வழியில் இதயத்தெய்வம் புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆர்.அவர்களின் இரட்டை இலை சின்னத்தில் வடமாகாண சபை தேர்தலில் போட்டியிடுகின்றார்கள் என குறித்த துண்டுப்பிரசுரத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.
தமிழ் தேசியக்கூட்டமைப்பு வீட்டுச்சின்னத்தில் வடமாகாண சபை தேர்தலில் போட்டியிடுகின்ற நிலையில் இந்த துண்டு பிரசுரம் தமிழ் தேசியக்கூட்டமைப்பின் ஆதரவாளர்கள் மத்தியில் குழப்பத்தையும் விசனத்தையும் ஏற்படுத்தியுள்ளது.
தமிழ் தேசியக் கூட்டமைப்பிற்கு எதிராக வடக்கில் துண்டுப்பிரசுரம்
Reviewed by Admin
on
August 17, 2013
Rating:
No comments:
Post a Comment