கூட்டமைப்பு 30 ஆம் திகதி நவிப்பிள்ளையுடன் சந்திப்பு
இலங்கைக்கு வருகை தரும் ஐ.நா. மனித உரிமைகள் ஆணையாளர் நவநீதம்பிள்ளை,எதிர்வரும் 30 ஆம் திகதி வெள்ளிக்கிழமை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பைச் சந்தித்துக் கலந்துரையாடுவதற்கு அழைப்பு விடுத்துள்ளார்.
"கொழும்பில் எம்மைச் சந்திப்பதற்கு 30 ஆம் திகதி நேரம் ஒதுக்கப்பட்டுள்ளது´ எனத் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் "உதயனு´க்குத் தெரிவித்தார்.
இந்தச் சந்திப்பின் போது வடக்கில் படைக்குறைப்பு, தமிழ் அரசியல் கைதிகள் விடுதலை தொடர்பில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு ஐ.நா. ஆணையாளருக்கு அழுத்தம் கொடுக்கவுள்ளது என்று தெரிவிக்கப்பட்டது.
அத்துடன் மனித உரிமைகள் விவகாரம் தொடர்பிலும்,வட மாகாண சபைத் தேர்தல் தொடர்பிலும் இந்தச் சந்திப்பில் கலந்துரையாடப்படவுள்ளது.
இலங்கைக்கு எதிர்வரும் 25 ஆம் திகதி வரும் ஐ.நா. மனித உரிமைகள் ஆணையாளர் பல்வேறு தரப்பினரையும் சந்தித்துப் பேசுவதுடன் வட பகுதிக்கும் பயணத்தை மேற்கொள்ளவுள்ளார்.
அவர் இலங்கையை விட்டு வெளியேற முன்னர் எதிர்வரும் 30ஆம் திகதி கொழும்பில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினரைச் சந்திக்கவுள்ளார்.
சந்திப்புக்கான அழைப்பு கிடைக் கப்பெற்றுள்ளதாகவும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் சம்பந்தன் தலைமையிலான குழு அவரைச் சந்திக்கும் என்று சுமந்திரன் மேலும் தெரிவித்தார்.
கூட்டமைப்பு 30 ஆம் திகதி நவிப்பிள்ளையுடன் சந்திப்பு
Reviewed by NEWMANNAR
on
August 21, 2013
Rating:

No comments:
Post a Comment