அண்மைய செய்திகள்

recent
-

வாடகைக்கமர்த்திய கார் மிளகாய்த்தூள் வீசி கடத்தல்: ஹொரணையில் ஒருவர் கைது

வாடகைக்கு காரொன்றை அமர்த்தி இடைவழியில் சாரதி மீது மிளகாய் தூள் வீசி 40 இலட்சம் பெறுமதியான காரை கொள்ளையடித்த நபரொருவர் ஹொரணை பொலிஸாரினால் நேற்று கைது செய்யப்பட்டுள்ளார்.

ஒருகொடவத்தை பகுதியிலுள்ள வாகனங்களை வாடகைக்கு வழங்கும் நிலையமொன்றுடன் தொலைபேசியில் தொடர்பு கொண்டுள்ள சந்தேக நபர் காரொன்றை வாடக்கைக்கு அமர்த்தியுள்ளார். இடைநடுவில் வைத்து குறித்த கார், கொள்ளையிடப்பட்டதாக பொலிஸாருக்கு தகவல் கிடைத்தது.

இது குறித்து இரவு ரோந்தில் ஈடுபடும் பொலிஸாருக்கும் பொலிஸ் சோதனைச் சாவடிகளுக்கும் அறிவிக்க ப்பட்டது. நேற்று அதிகாலை 12.30 மணியளவில் சந்தேக நபர் காருடன் கைது செய்யப்பட்டதாக பொலிஸார் கூறினர்.
வாடகைக்கமர்த்திய கார் மிளகாய்த்தூள் வீசி கடத்தல்: ஹொரணையில் ஒருவர் கைது Reviewed by NEWMANNAR on August 14, 2013 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.