கிளிநொச்சியை பொருளாதார கேந்திர நிலையமாக விரைவில் மாற்றுவேன். அமைச்சர் பசில் ராஜபக்ஷ.
மத்திய வங்கியின் பிராந்திய காரியாலயம் கிளிநொச்சியில் அமைக்கப்படுவதன் ஊடாக இப்பகுதி பொருளாதார கேந்திர நிலையமாக விரைவில் மாற்றம் பெறுமென
பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் பசில் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.
இலங்கை மத்திய வங்கியின் உத்தேச வடமாகாண அலுவலக கட்டிடத்திற்கான அடிக்கல் நாட்டி வைக்கும் நிகழ்வு கிளிநொச்சியில் நடைபெற்றது. இதில் பிரதம விருந்தினராகக் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அமைச்சர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
அவர் தொடர்ந்தும உரையாற்றுகையில்:
கிளிநொச்சி மாவட்டம் தற்போது பல பொருளாதார ரீதியிலான சவால்களை எதிர்கொண்டு முன்னேற்றம் கண்டுவரும் நிலையில் இந்த அலுவலகம் நிர்மாணிக்கப்படவுள்ளது.

கடந்த யுத்த காலங்களில் முற்றாக பாதிக்கப்பட்டிருந்த மக்களின் இயல்பு வாழ்க்கை தற்போது வழமைக்குத் திரும்பி வருகின்றது. இந்நிலையில் இங்கு பல்வேறு உட்கட்டுமான பணிகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.
கிளிநொச்சி மாவட்டம் உள்ளிட்ட வடபகுதியின் பொருளாதார அபிவிருத்தி செயற்திட்டங்களை மேலும் முன்னெடுப்பதற்கு நிர்மாணிக்கப்படவுள்ள இவ் அலுவலகம் அனுகூலமாக அமையுமென்பதுடன் கிளிநொச்சி மாவட்டம், பொருளாதார கேந்திர நிலையமாக மாற்றம் பெறுமென்றும் சுட்டிக்காட்டினார்.

Reviewed by NEWMANNAR
on
August 14, 2013
Rating:

No comments:
Post a Comment