மன்னார் மாவட்டத்தில் சுகயீனம் காரணமாக 6 மாணவர்கள் புலமைப்பரிசில் பரிட்சைக்கு தோற்றவில்லை- மன்னார் வலயக்கல்விப்பணிப்பாளர் எம்.எம்.சியான்
நேற்று இடம் பெற்ற தரம் 5 புலமைப்பரிட்சையில் மன்னார் மாவட்டத்தில் 1600 மாணவர்கள் பரிட்சைக்குத்தோற்றியதோடு சுகயீனம் காரணமாக 6 மாணவர்கள் பரிட்சைக்குத்தோற்றவில்லை என மன்னார் வலயக்கல்விப்பணிப்பாளர் எம்.எம்.சியான் தெரிவித்தார்.
இதன் போது மன்னார் மாவட்டத்தில் 25 பரிட்சை நிலையங்களும்,19 இணைப்பு நிலையங்களும் நிறுவப்பட்டு எவ்வித தடங்களும் இன்றி பரிட்சை இடம் பெற்றுள்ளது.
இதன் போது பொலிஸார் விசேட பாதுகாப்புக்களை வழங்கியதோடு ஒவ்வெரு பரிட்சை நிலையங்களுக்கும் விசேட 5 கண்காணிப்பாளர்கள் நியமிக்கப்பட்டிருந்ததாகவும் மன்னார் வலயக்கல்விப்பணிப்பாளர் எம்.எம்.சியான் மேலும் தெரிவித்தார்.
மன்னார் மாவட்டத்தில் சுகயீனம் காரணமாக 6 மாணவர்கள் புலமைப்பரிசில் பரிட்சைக்கு தோற்றவில்லை- மன்னார் வலயக்கல்விப்பணிப்பாளர் எம்.எம்.சியான்
Reviewed by NEWMANNAR
on
August 26, 2013
Rating:
No comments:
Post a Comment