அண்மைய செய்திகள்

recent
-

என்னை சிறைப்படுத்துவது குறித்து சிந்திக்கிறார்கள் - உப்புக்குளத்தில் நடைபெற்ற தேர்தல் பிரசாரத்தில் அமைச்சர் றிசாத்

மன்னார் மாவட்ட முஸ்லிம்களுக்கு இழைக்கப்பட்ட அநீதி தொ்டர்பில் நீதி கோறி போராட்டங்களை  நாம் முன்னெடுத்தால் அதனை இனவாதமாக திரித்து கூறுபவர்களாக சில மதத் தலைவர்கள் செயற்படுவதாக தெரிவித்துள்ள அமைச்சர் றிசாத் பதியுதீன், உப்புக்குளம் மக்களுக்கு இழைக்கப்பட்ட அநீதிக்கு எதிராக நியாயம் பெற்றுக்  கொடுக்க ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ரவூப் ஹக்கீமையும் அழைத்த போது,அதனை பொருட்படுத்தாது,இன்று மக்களின் வாக்குகளை சிதறித்து முஸ்லிம்களை தோல்வியடையச் செய்ய தனித்து போட்டியிடும் வேலையினை செய்வதை மக்கள் அறிந்து கொள்ள வேண்டும் என்றும் கூறினார்.
மன்னார் உப்புக்குளத்தில் இன்று இரவு இடம் பெற்ற அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தேர்தல் பிரசாரக் கூட்டத்தில் கலந்து கொண்டு உரையாற்றும் போது அவர் மேற்கண்டவாறு கூறினார்.
உப்புக்குளம் மீனவ சங்கத்தின் தலைவர் ஆலம் தலைமையில் இடம் பெற்ற பிரசாரக் கூட்டத்தில் பள்ளி பரிபாலன சபை தலைவர் ஓய்வு பெற்ற ஆசிரியர் ஆலம்,மன்னார் நகர சபை உறுப்பினர் எம்.நகுசீன்,டாக்டர் மகேந்திரன் உட்பட பெரும் எண்ணிக்கையிலானவர்கள் இக் கூட்டத்தின் போது பிரசன்னமாகியிருந்தனர். அமைச்சர் றிசாத் பதியுதீன் இங்கு மேலும் பேசும் போது –
உப்புக்குளம் மக்களுக்கு எதிராக மேற்கொள்ளப்பட்ட அடக்கு முறை தொடர்பில் பேசுவதற்கு வக்கிலாதவர்கள்,இம்மக்களது வாக்குகளை பெறுவதற்கு இன்று வருகின்றனர்.செய்யாத கற்றம் ஒன்றுக்காக சிரமங்களை அனுபவித்த இப்பிரதேச மக்களின் விமோசனத்திற்கு எப்பங்களிப்பினையும் செய்யாமல் இன்று இந்த மக்களிடம் வந்து பொய்யையும்,பிதட்டலையும் கூறி,வாக்குகளை பெறுவதற்கு முனைபவர்களுக்கு நீங்கள் தகுந்த பாடத்தை கற்பிக்க வேண்டும்.
நீதி அமைச்சராக இருந்து கொண்டு உப்புக்குளம் மக்களுக்கு எவ்வித உதவியினை செய்ய முடியாத தலைலமைத்துவத்தை இங்கு அழைத்தவந்து உங்களிடம் ஆசை வார்த்தைகளை கூறி,வாக்குகளை தமிழ் தேசிய கூட்டமைப்பின் வெற்றிக்காக சிதறடிக்கும் சதிகாரர்களை ஓரங்கட்ட வேண்டும்.எமது மாவட்ட மக்களுக்கு அநீதி இழைக்கப்பட்டுள்ளது,அதற்கு நியாம் பெற்றுக் கொடுக்க வந்த என்னையும் குற்றவாளியாக அடையாளப்படுத்தி எமது சமூகத்தின் இழப்புக்களுக்கு காரணமாக இருந்த துரோகிகளின்  முகத்திரைகளை கிழித்தெறியும் நல்லதொரு சந்தர்ப்பமாக இந்த தேர்தலை உப்புக்குளம் மக்கள் பயன்படுத்திக் கொள்ள வேண்டும்.
என்னை பொருத்த வரையில் நான் இந்த மாவட்டத்தில் வாழும் அனைதது சகமூகங்களின் தேவைகளை கண்டறிந்து அவற்றை சரிசமமாக பெற்றுக் கொடுக்கும் பணியினை செய்துவருகின்றேன்.ஆனால் சிலர் எனக்கெதிராக ஜனாதிபதியிடம் சென்று பொய்களை இட்டுகட்டிவிட்டு வந்துள்ளனர்.இவைகள் பொய் என்பதை இந்த நாட்டு ஜனாதிபதி நன்கறிவார்.
இந்த மாவட்டத்தில் இருந்து வெளியேற்றப்பட்ட மக்களை அவர்களது இடங்களில் மீள்குடியேற்றம் செய்கின்ற போது,அவர்களை பிறமாவட்ட மக்கள் என்று கூறி அதனை தடுக்கும் அசிங்கத்தை செய்கின்றனர்.நாங்கள் தமிழ் சகோதரர்களை எமது உறவுகளாக நேசிக்கின்றோம்.அவர்கள் கத்தோலிக்கர்களாக இருந்தால் என்ன,இந்துக்கலாக இருந்தால் என்ன எல்லோரும் இந்த மாவட்டத்தின் மக்கள் என்ற உயர்ந்த பார்வை எம்மிடமுள்ளது.ஆனால் மாவட்டத்தின் மதப் பெரியார்கள்,மற்றும் மத குருக்கல் என்று தம்மை அடையாளப்படுத்துபவர்களில் சிலர்,முஸ்லிம் சமூகத்திற்கு எதிராக செயற்படுகின்றனர்.
நான் இஸ்லாமியனாக இருக்கின்றேன்,அதற்காக இஸ்லாமியர்கள் மட்டுமே எல்லாவற்றையும் பெற்றுக் கொள்ள வேண்டும் என்று சிந்தித்ததில்லை.முஸ்லிம்களுக்கு எதையெல்லாம் நான் பெற்றுக் கொடுக்க முயற்சிக்கின்றேனோ,அதே போன்ற பங்கினை சகோதர சமூகத்தினருக்கும் பெற்றுக் கொடுக்கும் உளத்துடன் செயற்படுகின்றேன்.ஆனால் இவற்றை மக்கள் பெற்றுக் கொள்ளவடாமல்,அதற்குள் சென்று இனவாத சிந்தணைகளை விதைத்து இனங்களுக்கிடையில் பிளவுகளை ஏற்படுத்தும் காரியமும் மும்முரமாக இடம் பெறுகின்றது.
எமது மாவட்டத்தில் யார் வாழ்ந்தார்களோ,அவர்கள் இடம் பெயர்ந்து எங்கெல்லாம் இருக்கின்றார்களோ,அவர்கள் மீள எமது மண்ணுக்கு வாழை வருகின்ற போது,அவர்களுக்கான அனைத்து வசதிகளையும் செய்து கொடுப்பது தான் மனித பண்பாகும்.ஆனால் அம்மக்களை வஞ்சித்து மீண்டும் அகிதிகளாக விரட்டியடிக்க துடிக்கும் நபர்கள் எவராக இருந்தாலும்,அதனை செய்வதற்கு அவர்களுக்கு ஒரு போதும் இடமளிக்கமாட்டோம்,இந்த நாட்டில் ஜனநாயக ஆட்சி பெறுகின்றது.அந்த ஆட்சியின் அம்சங்களை எமது மாவட்டத்திலும் முன்னெடுக்க வேண்டியது எமது பொறுப்பாகும்.இந்த ஜனாநாயகத்தை நடை முறைப்படுத்த விடாமல் தடுக்கும் சக்திகளுக்கு எதிராக எமது ஜனநாயக போராட்டம் தொடரும்.
இன்று அமைச்சராக இருக்கும் என்னை சிறைப்படுத்த வேண்டும்,எனது மக்கள் பணியினை முடக்க வேண்டும்.அதன் மூலம் அநியாயமான அதிகாரங்களை தம் வைத்துக் கொண்டு அப்பாவி சமூகங்களை அடக்கி ஆள வேண்டும் என்று சிந்திப்பவர்களின் செயற்பாடுகளை இறைவன் நிராசையாக ஆக்க வேண்டும் என்று எமது மக்கள் பிரார்த்திக்க வேண்டும்.
எமது மாவட்டத்தில் வாழும் இந்து மற்றும் கத்தோலிக்க மக்கள் பெரும்பான்மையானவர்கள் எமது சேவையினை விரும்புகின்றார்கள்.அவர்கள் எம்முடன் இருக்கின்றார்கள் என்று கூறிய அமைச்சர் றிசாத் பதியுதீன்,இந்த மாவட்டத்தில் எந்த சமூகத்திற்கும் எதிராக எவர் செயற்பட்டாலும் நீதி,நேர்மை,மனிதத்துவம் என்பவைகளை இம்மண்ணில் நிலை நாட்ட போராட எப்போதும் தயங்கமாட்டேன் என்றும் கூறினார்.

என்னை சிறைப்படுத்துவது குறித்து சிந்திக்கிறார்கள் - உப்புக்குளத்தில் நடைபெற்ற தேர்தல் பிரசாரத்தில் அமைச்சர் றிசாத் Reviewed by NEWMANNAR on August 26, 2013 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.