தவணை பரீட்சையில் குறைந்த புள்ளிகளை பெற்றதால் 11 வயது மாணவன் தற்கொலை!
பாடசாலை தவணை பரீட்சையில் குறைந்த புள்ளிகளை பெற்றதால்
மனமுடைந்த 11 வயது மாணவர் கழுத்தில் சுருக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார் என பொலிஸார் தெரிவித்தனர். இந்த சம்பவம் திருகோணமலை தம்பலகாமம் சாமிமலை பிரதேசத்தில் இன்று நடந்துள்ளது.
பரீட்சையில் குறைந்த புள்ளிகளை பெற்றதால் மனமுடைந்த மாணவன் தனது பாடசாலை சிருடைக்காக வழங்கப்பட்டிருந்த கழுத்து பட்டியில் சுருக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார். உயிரிழந்த மாணவனின் தந்தை விளக்கமறியல் சிறையில் வைக்கப்பட்டுள்ளதுடன் தாய் வெளிநாட்டில் தொழில் புரிந்து வருவது விசாரணைகளில் தெரியவந்துள்ளது. மரணம் தொடர்பில் தம்பலகாமம் பொலிஸார் விசாரணைகளை நடத்தி வருகின்றனர்.
தவணை பரீட்சையில் குறைந்த புள்ளிகளை பெற்றதால் 11 வயது மாணவன் தற்கொலை!
Reviewed by Admin
on
August 03, 2013
Rating:

No comments:
Post a Comment