கதிர்காமர் மகனுக்கும் காணி தேவையாம் – சுவீகரிப்புக்கு எதிராக வழக்கு
சிறிலங்காப் படையினருக்காக வலிகாமம் வடக்கில் உள்ள தமது பாரம்பரிய காணி சுவீகரிக்கப்படுவதற்கு எதிராக, சிறிலங்காவின் முன்னாள் வெளிவிவகார அமைச்சர் லக்ஸ்மன் கதிர்காமரின் மகனும் மேல்முறையீட்டு நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்துள்ளார். லக்ஸ்மன் கதிர்காமரின் மகன் கிறிஸ்ரியன் கதிர்காமர், சமர்ப்பித்துள்ள இந்த மனுவில், சிறிலங்காவின் காணி, காணி அபிவிருத்தி அமைச்சர் ஜனக பண்டார தென்னக்கோன், யாழ்.மாவட்ட காணி சுவீகரிப்பு அதிகாரி உள்ளிட்டோர் பிரதிவாதிகளாக குறிப்பிடப்பட்டுள்ளனர்.
தெல்லிப்பழை பிரதேசத்தில் உள்ள மாவிட்டபுரம், ஆழ்வார் மாலையடியில் உள்ள தமது காணியை சுவீகரிப்பதற்கு எதிராகவே கிறிஸ்ரியன் கதிர்காமர் வழக்குப் பதிவு செய்துள்ளார்.
பொதுத் தேவைக்காக காணியை சுவீகரிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் அங்கு சிறிலங்கா படையினரின் முகாம் அமையவுள்ளதாகவும் தனக்கு அறிவித்தல் அனுப்பப்பட்டுள்ளதாக அந்த மனுவில் அவர் குறிப்பிட்டுள்ளார்.
ஆனால், பலாலி- காங்கேசன்துறை உயர் பாதுகாப்பு வலயத்துக்குள் வராத தனது பாரம்பரிய காணியை சுவீகரிப்பது சட்டத்துக்கு முரணானது என்றும், அதற்குத் தடைவிதிக்க வேண்டும் என்றும் கிறிஸ்ரியன் கதிர்காமர் கோரியுள்ளார்.
தெல்லிப்பழை பிரதேசத்தில் உள்ள மாவிட்டபுரம், ஆழ்வார் மாலையடியில் உள்ள தமது காணியை சுவீகரிப்பதற்கு எதிராகவே கிறிஸ்ரியன் கதிர்காமர் வழக்குப் பதிவு செய்துள்ளார்.

ஆனால், பலாலி- காங்கேசன்துறை உயர் பாதுகாப்பு வலயத்துக்குள் வராத தனது பாரம்பரிய காணியை சுவீகரிப்பது சட்டத்துக்கு முரணானது என்றும், அதற்குத் தடைவிதிக்க வேண்டும் என்றும் கிறிஸ்ரியன் கதிர்காமர் கோரியுள்ளார்.
கதிர்காமர் மகனுக்கும் காணி தேவையாம் – சுவீகரிப்புக்கு எதிராக வழக்கு
Reviewed by Admin
on
August 03, 2013
Rating:

No comments:
Post a Comment