மன்னார் பேரூந்து நிலையத்தில் சுகாதார சீரழிவு மக்கள் பெரும் திண்டாட்டம்.
மன்னார் பஸ் நிலையத்தில் காணப்படும் சுகாதார சீரழிவினால் மக்கள் பெரும் திண்டாட்டத்திற்க்கு உள்ளாகும் நிலமை தொடர் கதையாகக் காணப்படுகின்றது.
நாளாந்தம் மன்னார் பஸ் நிலையத்தில் இருந்து பல இடங்களுககும் பஸ் சேவை இடம் பெறுவதினால் அதிக எண்ணிக்கையான பயணிகள் பயன்படுத்தும் குறிப்பிட்ட பஸ் நிலையப் பகுதயில் கழிவு பொருட்கள் அகற்றப்படாமலும் குப்பைகள் கஞ்சல்கள் நிறைந்தும் காணப்படுகின்றது.
பொது மக்களினால் வீசப்படும் கழிவு போருட்கள் உரிய காலத்தில் எடுக்கப்படாமையால் துர்நாற்றம் வீசுவதுடன் கழிவுப் பொருட்களும் கூட கண்டபடி வீசப்பட்டு சுகாதாரமற்ற நிலமையும் காணப்படுகின்றது.
மன்னார் பேரூந்து நிலையத்தில் சுகாதார சீரழிவு மக்கள் பெரும் திண்டாட்டம்.
Reviewed by NEWMANNAR
on
August 12, 2013
Rating:

No comments:
Post a Comment