புதுவை இரத்தினதுரை அவர்களின் பாடலை யாரும் தடைசெய்யவில்லை! - ஆலய நிர்வாகம்! (Video Song)
மட்டக்களப்பு கொக்கட்டிச்சோலையில் அமைந்துள்ள வரலாற்று பிரசித்திபெற்ற தான்தோன்றீஸ்வரர் ஆலயத்தில் வழமையாக ஒலிக்கப்படும் ஈழத்துக் கவிஞர் புதுவை இரத்தினதுரையின் பாடலுக்கு யாரும் தடைவிதிக்கவில்லை என கொக்கட்டிச்சோலை தான்தோன்றீஸ்வரர் ஆலய பரிபாலனசபையின் செயலாளர் அவர்கள் தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் மேலும் கூறுகையில்
எமது ஆலயத்தில் வழமையாக ஒலிபரப்பப்பட்டு வரும் புதுவை இரத்தினதுரையின் பாடலான "பிட்டுக்கு மண் சுமந்த பெருமானார்" என்ற பாடல் தொடர்ச்சியாக ஒலிபரப்பப்பட்டு வருவதாகவும் அதனை தடைசெய்யும் உரிமை யாருக்கும் இல்லை என்பதுடன் அவ்வாறு யாராவது தடைசெய்வார்களானால் சட்டப்படி நீதிமன்றத்தை நாடுவோம்.
எனவே இனிமேல் செய்திகளை வெளியிடும் ஊடகங்கள் சம்மந்தப்பட்டவர்களை தொடர்புகொண்டு செய்தியை உறுதிப்படுத்திவிட்டு பிரசுரிக்கவேண்டுமெனவும் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
புதுவை இரத்தினதுரை அவர்களின் பாடலை யாரும் தடைசெய்யவில்லை! - ஆலய நிர்வாகம்! (Video Song)
Reviewed by NEWMANNAR
on
August 13, 2013
Rating:

No comments:
Post a Comment