இந்திய மீனவர்களினால் நாங்கள் தொடர்ந்தும் பாதிப்புக்களை சந்தித்து வருகின்றோம்-கடல் தொழில் அமைச்சரிடம் மன்னார் புதுக்குடியிருப்பு கிராம மீனவர்கள் தெரிவிப்பு.
இந்திய மீனவர்களின் அத்துமீறல்கள் தொடர்ந்தும் அதிகரித்துக்காணப்படுவதாகவும் இவர்களின் அத்துமீறிய செயற்பாட்டை கட்டுப்படுத்த கடல் தொழில் அமைச்சு உரிய நடவடிக்கையினை மேற்கொள்ள வேண்டும் என மன்னார் புதுக்குடியிருப்பு கிராம மீனவர்கள் கடல் தொழில் நீரியல் வளத்துறை அமைச்சர் ராஜீத சேனாரத்தினவிடம் கோறிக்கை விடுத்துள்ளனர்.
-கடல் தொழில் அமைச்சினால் புதுக்குடியிருப்பு கிராமத்தில் அமைக்கப்பட்ட புதுக்குடியிருப்பு கடல் தொழில் சேவை நிலையம் வைபவ ரீதியாக நேற்று திங்கட்கிழமை திறந்து வைக்கப்பட்டது.
இதன் போது கலந்து கொண்ட கடல் தொழில் நீரியல் வளத்துறை அமைச்சர் ராஜீத சேனாரத்தினவிடம் குறித்த கிராம மீனவர்கள் கோறிக்கை விடுத்துள்ளனர்.
இவ்விடையம் தொடர்பாக மீனவர்கள் மேலும் அமைச்சரிடம் தெரிவிக்கையில்,,,,
கடந்த காலங்களை விட தற்போது இந்திய மீனவர்களின் வருகை அதிகரித்த நிலையில் காணப்படுகின்றது.அத்து மீறி இலங்கை கடல் எல்லைக்குள் வரும் இந்திய மீனவர்கள் கைது செய்யப்பட்டு ஒரு சில தினங்களில் விடுதலை செய்யப்படுகின்றனர்.
இந்த விடுதலையை சாட்டாக வைத்துக்கொண்டு அவர்கள் தொடர்ச்சியாக வந்து செல்லுகின்றனர்.இதனால் எமது மீனவர்கள் தொடர்ச்சியாக பல்வேறு பிரச்சினைகளுக்கு முகம் கொடுத்து வருகின்றனர்.
எனவே இவ்விடையம் தொடர்பில் உறுதியான முடிவை எடுக்குமாறு அமைச்சரிடம் மீனவர்கள் கோரிக்கை விடுத்தனர்.
இந்த நிலையில் உரிய கடற்படை அதிகாரியை அழைத்து இனி வரும் காலங்களில் இலங்கை கடல் எல்லைக்குள் நுழையும் இந்திய மீனவர்களை கைது செய்து சட்ட நடவடிக்கை எடுக்கும் படியும்,அவர்கள் பயணிக்கும் படகுகளை கடற்கரைக்கு கொண்டு வந்து கட்டி வைத்து சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் கடற்படையினருக்கு உத்தரவிட்டார்.
இந்திய மீனவர்களினால் நாங்கள் தொடர்ந்தும் பாதிப்புக்களை சந்தித்து வருகின்றோம்-கடல் தொழில் அமைச்சரிடம் மன்னார் புதுக்குடியிருப்பு கிராம மீனவர்கள் தெரிவிப்பு.
Reviewed by NEWMANNAR
on
August 13, 2013
Rating:
No comments:
Post a Comment