தமிழ் தேசியக்கூட்டமைப்பிற்கும்-நல்லாட்சிக்கான மக்கள் இயக்கத்திற்கும் இடையில் நேற்று மன்னாரில் புரிந்துணர்வு ஒப்பந்தம் கைச்சார்த்து.
எட்டு அம்சங்கள் உள்ளடங்கிய மேற்படி புரிந்துணர்வு உடன்படிக்கையில் தமிழ் தேசியக் கூட்டமைப்பு சார்பாக அதன் பொதுச்செயலாளர் திரு. மாவை.சோ. சேனாதிராஜா (பா.உ) அவர்களும் நல்லாட்சிக்கான மக்கள் இயக்கத்தின் தலைமையிலான கூட்டமைப்பு சார்பாக அதன் மத்திய நிறைவேற்றுக் குழுவின் தலைவர் அஷ்ஷெய்க். எம்.பி.எம்.பிர்தௌஸ் (நளீமி) அவர்களும் கையொப்பமிட்டனர்.
மேற்படி புரிந்துணர்வு ஒப்பந்தம் கைச்சாத்திடும் நிகழ்வில் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவரும்,திருகோணமலை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான இரா.சம்பந்தன் மற்றும் தமிழ் தேசியக்கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர்கலான எம்.ஏ. சுமந்திரன் , செல்வம் அடைக்கலநாதன், நீதிக்கும் சமாதானத்திற்குமான முன்னணியின் தலைவர் அஷ்ஷெய்க் நஜா முகம்மத், தமிழ் தேசியக் கூட்டமைப்பின் சார்பில் வட மாகாணசபைத் தேர்தலில் போட்டியிடும் முஸ்லிம் வேட்பாளர் அஷ்ஷெய்க் அய்யூப் அஸ்மின் மற்றும் நல்லாட்சிக்கான மக்கள் இயக்கத்தின் சூறாசபை உறுப்பினர்கள், செயற்குழு உறுப்பினர்கள் உட்பட பலரும் கலந்து கொண்டனர்.
தமிழ் தேசியக்கூட்டமைப்பிற்கும்-நல்லாட்சிக்கான மக்கள் இயக்கத்திற்கும் இடையில் நேற்று மன்னாரில் புரிந்துணர்வு ஒப்பந்தம் கைச்சார்த்து.
Reviewed by Admin
on
September 10, 2013
Rating:
No comments:
Post a Comment