ஜனாதிபதி இன்று மாலை மன்னார் விஜயம்.
மன்னார் பொது விளையாட்டு மைதானத்தில் இன்று மாலை 3 மணியளவில் இடம் பெறவுள்ள குறித்த தேர்தல் பரப்புரைக்கூட்டத்திற்கு ஜனாதிபதி கலந்து கொள்ளவுள்ள நிலையில் நேற்று செவ்வாய்க்கிழமை மதியம் முதல் மன்னார் மாவட்டத்தில் பல ஆயிரக்கணக்கான இராணுவம்,பொலிஸ் குவிக்கப்பட்டு பாதுகாப்புக்கள் பலப்படுத்தப்பட்டுள்ளது.
மன்னார் பொது விளையாட்டு மைதானத்திற்கு செல்லும் சகல பாதைகளிலும் விசேட விதமாக வீதித்தடைகள் அமைக்கப்பட்டுள்ளது.
ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி சார்பாக மன்னார் மாவட்டத்தில் போட்டியிடுகின்ற 8 வேட்பாளர்களையும் அறிமுகம் செய்து பரப்புரையை ஜனாதிபதி ஆரம்பித்து வைப்பார்.
இந்த நிகழ்வில் அமைச்சர் றிஸாட் பதியுதீன் உற்பட பராளுமன்ற உறுப்பினர்களும் கலந்து கொள்ளவார்கள் என ஏற்பாட்டுக்குழு அறிவித்துள்ளது.
ஜனாதிபதி இன்று மாலை மன்னார் விஜயம்.
Reviewed by Admin
on
September 11, 2013
Rating:

No comments:
Post a Comment