மன்னார் நானாட்டானில் இடம் பெற்ற தமிழ் தேசியக்கூட்டமைப்பின் தேர்தல் பிரச்சார கூட்டம்-பெருந்திரளான மக்கள் பங்கேற்பு -படங்கள்
நேற்று மாலை 4.30 மணியளவில் ஆரம்பமான குறித்த பிரச்சாரக்கூட்டத்தின் போது பாராளுமன்ற உறுப்பினர்களுக்கும்,தமிழ் தேசியக்கூட்டமைப்பின் மன்னார் மாவட்ட வேட்பாளர்களுக்கும் நானாட்டான் மக்கள் அமோக ஆதரவை வழங்கி வரவேற்றனர்.
ஆரம்ப நிகழ்வாக ,மன்னார் மாவட்டத்தில் தேர்தலில் போட்டியிடும் 8 வேட்பாளர்களான வைத்திய கலாநிதி என்.குணசீலன், சட்டத்தரணி டெணிஸ்வரன், சட்டத்தரணி பிறிமுஸ் சிராய்வா, அயுப் அஸ்மி, சாள்ஸ் நிர்மலநாதன், விமலசேகரம், சிவகரன், யூட் ஆகியோர் அறிமுக உரையாற்றினர்.
இதனைத் தொடர்ந்து தமிழ் தேசியக்கூட்டமைப்பின் தலைவரும்,பாராளுமன்ற உறுப்பினருமான இரா.சம்பந்தன் மற்றும் பாராளுமன்ற உறுப்பினர்களான மாவை சேனாதிராசா, செல்வம் அடைக்களநாதன்,எஸ்.வினோ நோகராதலிங்கம்,அரியேந்திரன்,சிவசக்தி ஆனந்தன் ,எம்.ஏ.சுமந்திரன், , முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரும்; சட்டத்தரணியுமான சிறிகாந்தா, கிழக்கு மாகாண சபை உறுப்பினர் கருணாகரம் ஜனா ஆகியோர் கலந்த கொண்டு உரையாற்றினர்.
இதன் போது ஆயிரக்கணக்கானஆதரவாளர்கள் கலந்து கொண்டு அமோக ஆதரவினை வழங்கினர்
மன்னார் நானாட்டானில் இடம் பெற்ற தமிழ் தேசியக்கூட்டமைப்பின் தேர்தல் பிரச்சார கூட்டம்-பெருந்திரளான மக்கள் பங்கேற்பு -படங்கள்
Reviewed by Admin
on
September 10, 2013
Rating:
No comments:
Post a Comment