அண்மைய செய்திகள்

  
-

திருமலை மாணவர்கள் கொலை விவகாரம்: சர்வதேச மன்னிப்புச் சபையின் பிரதிநிதிகள் ஜெனிவா விஜயம்

திருகோணமலையில் 5 மாணவர்கள் கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பான விசாரணைகளை பார்வையிடுவதற்காக சர்வதேச மன்னிப்புச் சபையின் உயர்மட்டப் பிரதிநிதிகள் குழு இந்த வாரம் ஜெனிவா மனித உரிமை ஆணைக்குழுவிற்கு விஜயம் செய்ய உள்ளது. கொலை செய்யப்பட்ட மணாவர்களில் ஒருவரின் தந்தையான மருத்துவர் காசிப்பிள்ளை மனோகரனும் மன்னிப்புச் சபையின் பிரதிநிதிகளுடன் செல்ல உள்ளார்.

அதேவேளை மாணவர்கள் கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பில் இதுவரை தீர்வு காணப்படவில்லை எனவும் இலங்கை பாதுகாப்பு தரப்பினர் இந்த கொலைகளுக்கு பொறுப்புக் கூறவேண்டியவர்கள் எனவும் மன்னிப்புச் சபை குறிப்பிட்டுள்ளது. தனது மகன் கொலை செய்யப்பட்ட நாளில் இருந்து மருத்துவர் மனோகரன் கொலை செய்யப்பட்டவர்களுக்கு நீதி கிடைக்க வேண்டும் என குரல் எழுப்பி வருகிறார்.

இந்த நிலையில் அவர் அவரது குடும்பத்தினருடன் இலங்கையில் இருந்து வெளியேறும் நிர்ப்பந்தம் ஏற்பட்டது.இலங்கையின் மனித உரிமைகள் தொடர்பில் 50 ஆயிரம் கையெழுத்துக்கள் அடங்கிய மகஜர் ஒன்றை மனேகரன் மனித உரிமை ஆணைக்குழுவில் கையளிக்க உள்ளார்.



திருமலை மாணவர்கள் கொலை விவகாரம்: சர்வதேச மன்னிப்புச் சபையின் பிரதிநிதிகள் ஜெனிவா விஜயம் Reviewed by Admin on September 20, 2013 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.