மன்னாரில் உள்ள வாக்குச்சாவடிகளுக்கு சிங்கள விசேட வாக்குப்பதிவு அதிகாரிகள் நியமனம்-செல்வம் எம்.பி முறைப்பாடு
நாளை 21 ஆம் திகதி இடம் பெறவுள்ள வடமாகண சபை தேர்தலில் மன்னார் மாவட்டத்தில் உள்ள வாக்குச்சாவடிகளில் விசேட கண்காணிப்பிற்காக நியமிக்கப்பட்ட தமிழ் விசேட வாக்குப்பதிவு அதிகாரிகளின் செயற்பாடுகள் மட்டுப்படுத்தப்பட்டு சிங்கள விசேட வாக்குப்பதிவு அதிகாரிகள்;நியமிக்கப்பட்டுள்ளதாக தமிழ் தேசியக்கூட்டமைப்பின் வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுபபினர் செல்வம் அடைக்கலநாதன் குற்றம் சுமத்தியுள்ளார்.
இது தொடர்பில் கட்சி தலைமையூடாக தேர்தல் திணைக்கள அதிகாரிகளிடமும்,தேர்தல் கண்காணிப்புக்குழுக்களிடமும் இன்று வெள்ளிக்கிழமை(20-09-2013) முறைப்பாடு செய்துள்ளதாக அவர் தெரிவித்தார்.
நாளை இடம் பெறவுள்ள வடமாகாண சபை தேர்தலுக்காக மன்னார் மாவட்டத்தில் உள்ள வாக்குச்சாவடிகளில் விசேட கண்காணிப்பிற்காக 25 தமிழ் விசேட வாக்குப்பதிவு அதிகாரிகள் நியமிக்கப்பட்டிருந்தனர்.
இந்த நிலையில் குறித்த தமிழ் அதிகாரிகளின் கடமைகள் மட்டுப்படுத்தப்பட்டு தேசிய அடையாள அட்டை மாத்திரமே பரிசோதிப்பதற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
ஏனைய சகல கடமைகளையும் சிங்கள அலுவலர்கள் மேற்கொள்ளவுள்ளனர்.
இவர்களுடன் முஸ்லிம் அதிகாரிகளும் நியமிக்கப்பட்டுள்ளனர். இதனால் குறித்த வாக்குச்சாவடிகளில் பல்வேறு மோசடிகள் இடம் பெற சந்தர்ப்பங்கள் உள்ளதாகவும் இதனை கருத்தில் கொண்டே தேர்தல் கண்காணிப்புக்குழுவிடமும்,தேர்தல் திணைக்களத்திடமும் முறையிட்டுள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்.
மன்னாரில் உள்ள வாக்குச்சாவடிகளுக்கு சிங்கள விசேட வாக்குப்பதிவு அதிகாரிகள் நியமனம்-செல்வம் எம்.பி முறைப்பாடு
Reviewed by Admin
on
September 20, 2013
Rating:

No comments:
Post a Comment