போதனா வைத்தியசாலையில் பாஸ் நடைமுறை பார்வையாளர்களுக்கு பல்வேறு அசௌகரியம்
யாழ் . போதனா வைத்தியசாலையிலுள்ள நோயாளர்களைப் பார்வையிடுவதற்கென புதிதாக
வைத்தியசாலை நிர்வாகத்தினால் பாஸ் நடைமுறை கொண்டுவரப்பட்டுள்ளது . இதனால் நோயாளர்களைப் பார்வையிடுவதற்கு செல்கின்றவர்ளுக்கு பெரும் அசௌகரியங்கள் ஏற்பட்டுள்ளதாக பொதுமக்கள் விசனம் தெரிவிக்கின்றனர் .
இவ் விடயம் தொடர்பாக மேலும் தெரியவருவதாவது ,
கடந்த காலங்களில் யாழ் . போதனா வைத்தியசாலையில் நோயாளர்களைப் பார்வையிடுவதற்கு நேரக்கட்டுப்பாடே இருந்து வந்துள்ளது .குறிப்பிட்ட நேரத்திற்குள் நோயாளர்களைப் பார்வையிட்ட பின்னர் நாங்கள் வைத்தியசாலையை விட்டு வெளியேறிவிடுவோம் . இதுவே வழமையான செயற்பாடாக இருந்து வந்துள்ளது .
ஆனால் தற்பொழுது வைத்தியசாலையின் நிர்வாகத்தினால் நோயாளர்களைப் பார்வையிடுவதற்கு பாஸ் நடைமுறை அமுல்படுத்தப்பட்டுள்ளது
.
இப் பாஸ் நடைமுறையினால் ஒரு அனுமதியட்டையில் இரண்டு பார்வையாளர்களே வைத்தியசாலைக்குள் செல்லக்கூடியதாகவுள்ளது . இதனால் வைத்தியசாலையின் பார்வையாளர்களுடன் முரண்பாடுகளில் ஈடுபடவேண்டிய நிலை காணப்படுகின்றது .
வெளிநாடுகளிலிருந்தும் நாட்டின் வெவ்வேறு பிரதேசங்களிலிருந்தும் செல்கின்ற பார்வையாளர்கள் இப் பாஸ் நடைமுறையினால் பல்வேறு அசௌகரியங்களுக்கு உள்ளாகி வருகின்றனர் .
வைத்தியசாலையின் முன்பக்கத்தில் மிக நீண்டநேரமாகப் பார்வையாளர்கள் காத்திருக்க வேண்டியுள்ளதுடன் இரண்டு பார்வையாளர்கள் சென்று நோயாளர்களைப் பார்வையிட்ட பின் திரும்பி வந்த பின்பே மற்றைய இரண்டு நோயாளர்களைப் பார்வையிடச் செல்லமுடியும் .எனவே பாஸ் நடைமுறை என்பது வைத்தியசாலைக்கு தேவையான ஒன்றாக இருந்தாலும் அதில் வரையறையைக் கடைப்பிடிப்பது பார்வையாளர்களுக்கு பெரும் அசௌகரியங்களை ஏற்படுத்தியுள்ளது எனவும் இந் நடைமுறையில் தளர்வுகளை கொண்டுவரவேண்டும் எனவும் மக்கள் கோரிக்கை விடுக்கின்றனர் .
போதனா வைத்தியசாலையில் பாஸ் நடைமுறை பார்வையாளர்களுக்கு பல்வேறு அசௌகரியம்
Reviewed by Admin
on
September 19, 2013
Rating:

No comments:
Post a Comment