மன்னார் அடம்பனில் உள்ள ஒரு கிராமத்தில் 40 பெண்களுக்கு வாக்காளர் அட்டைகள் இல்லை.
மன்னார் மாவட்டத்தில் மீள் குடியேற்றம் செய்யப்பட்ட அடம்பன் பிரதேசத்தில் சொர்ணபுரி என்ற கிராமம் முஸ்லிம் மக்கள் அதிகமாக வாழும் கிராமமாகும்.
இந்தக் கிராமத்தில் உள்ள சுமார் 40 பெண்களுக்கு வாக்காளர் அட்டைகள் வரவில்லை என்று அந்த பெண்கள் தெரிவிக்கின்றனர்.
குடும்பத்தில் உள்ள ஆண் உறுப்பினர்களுக்கு வாக்காளர் அட்டைகள் வந்துள்ள போதும் அக் குடும்பங்கயளில் உள்ள பெண்களுக்கு வாக்காளர் அட்டைகள் வரவில்லை.
கடந்த காலத்தில் தொடர்ந்து வாக்களித்து வந்த தமக்கு ஏன் வாக்காளர் அட்டைகள் வரவில்லை என்ற குழப்பத்தில் இக்கிராமத்தின் பெண்கள் உள்ளனர்.
முதலில் ஒரு சிலர் தமக்கு வாக்காளர் அட்டைகள் வரவில்லை என்று தெரிவித்த பொழுதே அக் கிராமத்தைச் சேர்ந்த பல பெண்களுக்கு வாக்காளர் அட்டைகள் அனுப்பி வைக்கப்டாமை தெரியவந்தது.
இது தொடர்பில் கருத்துத் தெரிவித்த பிரதேசவாசி ஒருவர்,,,,,
வடமாகாண சபை தேர்தலுக்கான வாக்காளர் அட்டைகள் குறித்த பெண்களுக்கு அனுப்பி வைக்கப்படவில்லை.ஆனால் எமக்கு வாக்களியுங்கள் என்று கடிதம் அனுப்பியுள்ளார்கள்' என்று குறிப்பிட்டார்.
இது தமது வாக்குரிமையை மறுக்கும் நடவடிக்கையாக காணப்படுவதாக மன்னார் அடம்பன் பிரதேசத்தின் சொர்ணாபுரி கிராமப் பெண்கள் தெரிவிக்கின்றனர்.
எனவே உரிய அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுத்து வாக்காளர் அட்டைகள் கிடைக்காத அனைவரையும் வாக்களிப்பதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு அந்த மக்கள் உரிய தரப்பினரிடம் கோரிக்கை விடுத்துள்ளனர்.
மன்னார் அடம்பனில் உள்ள ஒரு கிராமத்தில் 40 பெண்களுக்கு வாக்காளர் அட்டைகள் இல்லை.
Reviewed by Admin
on
September 19, 2013
Rating:

No comments:
Post a Comment