ஜனாதிபதி இன்று அல்லது நாளை அமெரிக்கா விஜயம்
ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ இன்று அல்லது நாளை அமெரிக்காவிற்கு விஜயம் செய்ய உள்ளார்.
ஐக்கிய நாடுகள் அமைப்பின் பொதுச் சபைக் கூட்டத்தில் பங்கேற்பதற்காக ஜனாதிபதி அமெரிக்காவிற்கு விஜயம் செய்ய உள்ளார்.
ஐக்கிய நாடுகள் அமைப்பின் பொதுச் சபைக் கூட்டம் அமெரிக்காவின் நியூயோர்க்கில் ஆரம்பமாகியுள்ளது. 193 நாடுகளைச் சேர்ந்த பிரதிநிதிகள் இந்த அமர்வுகளில் பங்கேற்க உள்ளனர்.
இலங்கை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவும் இம்முறை அமர்வுகளின் போது உரையாற்றுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.
தேர்தல் நடைபெறவுள்ள நிலையில் ஜனாதிபதி, எப்போது அமெரிக்கா நோக்கிப் புறப்படுவார் என்பது பற்றிய சரியான தகவல்களை ஜனாதிபதி செயலகம் இன்னமும் உறுதிப்படுத்தவில்லை. எவ்வாறெனினும், ஜனாதிபதியுடன், வெளிவிவகார அமைச்சர் உள்ளிட்ட சிலர் அமர்வுகளில் பங்கேற்க உள்ளனர்.
ஜனாதிபதி இன்று அல்லது நாளை அமெரிக்கா விஜயம்
Reviewed by Admin
on
September 20, 2013
Rating:

No comments:
Post a Comment