இராமேஸ்வர மீனவர்கள் 41 பேருக்கும் விளக்கமறியல் நீடிப்பு
இராமேஸ்வரத்தைச் சேர்ந்த மீனவர்கள் 41 பேர் கடந்த ஜூலை 6 மற்றும் ஒகஸ்ட் 3-ம் திகதியன்று இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்டனர்.
பின்னர் அவர்கள் நீதிமன்றில் ஆஜர் செய்யப்பட்டு நீதிமன்றத்தின் உத்தரவிற்கமைவாக விளக்கமறியலில் வைக்கப்பட்டனர். இந்நிலையில் இன்று வெள்ளிக்கிழமை குறித்த 41 மீனவர்களும் மன்னார் நீதிமன்றில் ஆஜர் படுத்தப்பட்டனர்.
இதன் போது விசாரனைகளை மேற்கொண்ட மன்னார் நீதவான் ஆனந்தி கனகரட்ணம் குறித்த மீனவர்களை எதிர்வரும் 25 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க உத்தரவிட்டார்.
இராமேஸ்வர மீனவர்கள் 41 பேருக்கும் விளக்கமறியல் நீடிப்பு
Reviewed by Admin
on
September 20, 2013
Rating:

No comments:
Post a Comment