மன்னாரில் பல்வேறு தடைகளை தாண்டி மக்கள் ஆர்வத்துடன் வாக்களிப்பு.
வடமாகாண சபை தேர்தலுக்காண வாக்களிப்புக்கள் மன்னார் மாவட்டத்தில் சுமூகமான முறையில் இடம் பெற்று வருகின்றது.
-மன்னார் மாவட்டத்தில் 70 வாக்களிப்பு நிலையங்கள் அமைக்கப்பட்டுள்ளது
. மன்னார் வாக்களிப்பதற்காக 75 ஆயிரத்து 737 பேர் வாக்களிக்கத்தகுதி பெற்றுள்ளனர்.
5 வேட்பாளர்களை தெரிவு செய்வதற்காக 12 கட்சிகள் மற்றும் 8 சுயேட்சைக்குழுக்களைச் சேர்ந்த 160 பேர் வேட்பாளர்களாக போட்டியிடுகின்றனர். 
இன்று காலை 7 மணி முதல் 10 மணி வரை 20 வீதமான வாக்குகள் பாதிவாகியுள்ளது.இதே சபையம் அரச தரப்பு வேட்பாளர்கள் மற்றும் ஆதரவாளர்களினால் சிறு சிறு குழப்பங்கள் ஏற்பட்டுள்ளது. 
 மாவட்டத்தில் பல இடங்களுக்கு வாக்களர்களை ஏற்றி வாக்குச்சாவடி அமைந்துள்ள இடங்களுக்கு இறக்கி விடுவதற்காக தமிழ் தேசியக்கூட்டமைப்பினால் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த தனியார் போக்குவரத்து சேவைகள் பலவற்றை பொலிஸார் தலையிட்டு நிறுத்த முயற்சி செய்து வருவதாக தமிழ் தேசியக்கூட்டமைப்பின் வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் தெரிவித்தார்.
பல்வேறு தடைகளுக்கு மத்தியிலும் மன்னார் மாவட்ட மக்கள் ஆர்வத்துடன் வாக்களித்து வருகின்றமையும் குறிப்பிடத்தக்கது.
மன்னாரில் பல்வேறு தடைகளை தாண்டி மக்கள் ஆர்வத்துடன் வாக்களிப்பு.
 
        Reviewed by Admin
        on 
        
September 21, 2013
 
        Rating: 
      

No comments:
Post a Comment