கிளிநொச்சியிலிருந்து மாத்தறை வரை புகையிரத சேவையை வழங்க ஏற்பாடு
மாத்தறையில் இருந்து அனுராதபுரம் வரை வார இறுதி நாட்களில் சேவையில் ஈடுபட்டுவந்த புகையிரத சேவையை கிளிநொச்சி வரை விஸ்தரிப்பதற்கு புகையிரத திணைக்களம் நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இதனடிப்படையில் சனிக்கிழமை காலை 7.00 மணிக்கு மாத்தறையிலிருந்து புறப்படும் புகையிரதம் முற்பகல் 9.50 மணிக்கு கோட்டை புகையிரத நிலையத்தையும் பிற்பகல் 3.50 மணிக்கு கிளிநொச்சி புகையிரத நிலையத்தையும் சென்றடையவுள்ளது.
கிளிநொச்சியில் ஞாயிற்றுக்கிழமை முற்பகல் 11 மணிக்கு பயணத்தை ஆரம்பிக்கும் புகையிரதம் மாலை 5.15 மணிக்கு கொழும்பு கோட்டை புகையிரத நிலையத்தினையும் இரவு 7.15 மணிக்கு மாத்தறை புகையிரத நிலையத்தையும் சென்றடையவுள்ளது.
வடக்கு தெற்கு உறவு பாலமாக இந்த போக்குவரத்து சேவை செயற்படுவதாக அதிகாரிகள் தெரிவிக்கின்றமை குறிப்பிடத்தக்கது.
கிளிநொச்சியிலிருந்து மாத்தறை வரை புகையிரத சேவையை வழங்க ஏற்பாடு
Reviewed by Admin
on
September 30, 2013
Rating:

No comments:
Post a Comment