5 ஆம் தர புலமைப் பரிசில் பெறுபேறுகள் நாளை
ஐந்தாம் தர புலமை பரிசில் பரீட்சையின் பெறுபேறுகள் நாளை வெளியிடவுள்ளதாக கல்வி அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்தார்.
எதிர்வரும் காலங்களில் சர்வதேச சிறுவர் தினமான ஒக்டோபர் மாதம் முதலாம் திகதியே பரீட்சையின் பெறுபேறுகளை வெளியிட நடவடிக்கை எடுப்பதாகவும் அமைச்சர் மேலும் தெரிவித்தார்.
இதன்படி, சகல மாணவர்களும் தமது பெறுபேறுகளை பரீட்சை திணைக்களத்தின் www.doenets.lk என்ற இணையத்தளத்தினூடாக நாளை பிற்பகல் தெரிந்து கொள்ளலாம்.
இதேவேளை, இம்முறை ஐந்தாம் தர புலமைபரிசில் பரீட்சைக்கு மூன்று இலட்சத்து 22ஆயிரத்து 455 மாணவர்கள் தோற்றியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
5 ஆம் தர புலமைப் பரிசில் பெறுபேறுகள் நாளை
Reviewed by Admin
on
September 30, 2013
Rating:

No comments:
Post a Comment