அண்மைய செய்திகள்

recent
-

2009 ம் ஆண்டு சிவன் அருள் இல்லத்துக்காக சமைத்து வழங்கிய உணவுக்கான பணத்தினை சிவன் அருள் இல்லத்தினர் நான்கு வருடமாக தரமறுப்பதாக புகார்- பொய்யான குற்றசாட்டு என மறுக்கும் சிவன் அருள் இல்லமும் !!

2009 ம் ஆண்டு நாட்டில் எற்பட்ட போர்ச் சூழல் காரணமாக இடம் பெயர்ந்த நோயாளிகள் குடும்பங்கள் என பெருமளவினர் மன்னார் பொது வைத்திய சாலையில் தங்கி சிகிச்சை பெற்று வந்தனர். இச் சூழ்நிலையில் அம் மக்களுக்கு தேவையான சமைத்த உணவை பல பொது நோக்கு உள்ள நிறுவனங்கள்(அன்னை இல்லம், வாழ்வுதயம்   ,சிவன் அருள் இல்லம் போன்ற பொதுத் தொண்டு அமைப்பு) மனிதாபிமான அடிப்படையில்வழங்கி இருந்தனர் என்பது யாவரும் அறிந்ததே. .


                     அப்போது  சிவன் அருள் இல்லத்துக்காக சமைத்த உணவினை வழங்கிய சிவலோஜினி என்பவர் தான் சிவன் அருள் இல்லத்துக்காக    சமைத்து வழங்கிய உணவிற்கான ஒரு தொகை பணமான
 ரூபா 2,331,200.00 இனை சிவனருள் இல்லம் தர மறுப்பதாக மன்னார் இணையத்துக்கு தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில் அதாவது சிவன் அருள் இல்லத்தின் வேண்டுகோளுக்கிணங்க தானே பொறுப்பெடுத்து
 9.5.2009 - 16.8.2009வரை சமைத்த உணவினை வழங்கினேன் இக்காலத்தில் 9.5.2009- 5.7.2009 வரை வழங்கப்பட்ட உணவின் பணத் தொகை உரிய முறையில் வழங்கப்பட்டது ஆனால் பின்னர்
06.07.2009- 16.08.2009 வரை வழங்கிய உணவிற்கு இன்றுவரை பணம் தரவில்லை இதனால் சமையல் காரர்களிற்கு வழங்க வேண்டிய பணத்தை எனது நகையை அடகு வைத்தும் நண்பர்களிடம் இருந்தும் உதவி பெற்று வழங்கினேன்.

மீதிப்பணத்தை பெறுவதற்காக  பலமுறை உரியவர்களிடம் சென்றும் பலன் கிடைக்காத நிலையில் முன்னாள் மன்னார் அரசாங்க  அதிபர் நிக்கலாப் பிள்ளை,திரு. நமசிவாயம் (காலமாகிவிட்டார் )மன்னார் அரசசார்பற்ற நிறுவனம்,அன்னை இல்லம்,வாழ்வோதயம்,மன்னார் ஆயர் முதலானோருக்கு பல மனுக்களை அனுப்பியும் உள்ளேன் .

மேலும் இது தொடர்பாக அவர் கூறியதாவது  நான் திரு,மாணிக்கவாசகர்
திரு .ஜேந்திரன் அவர்களிடம் கேட்ட போது உணவுக்காக ஒதுக்கிய பணம் முடிவடைந்து விட்டது மற்றும் உணவு வழங்கலில் ஊழல் இடம் பெற்றதாகவும் கூறி பணம் தர மறுத்துவிட்டனர் என்றார்.

சமையல் காரர்களின் நிலையினை உணர்ந்து நான் எனது நகைகளை அடகு வைத்தும் எனது நண்பர்கள் மூலமாக பணம் பெற்றும் அவர்களுக்கு கொடுத்தேன் சிவன் அருள் இல்லம் இதுவரை பணம் தர வில்லை என் நகைகள் தற்போது ஏலத்திற்கு போகும் நிலையில் உள்ளது என்றார் .

இவ் விடயம் தொடர்பாக மன்னார் இணையம் சிவன் அருள் இல்லத்தை தொடர்பு கொண்டு கேட்ட போது தமது நிறுவனத்தின் மீது களங்கம் ஏற்படுத்தவே சிவலோஜினி அவர்களால் குற்றம் சுமத்தப்படுவதாகவும்
 9.5.2009- 5.7.2009 வரையே தாங்கள் உணவை வழங்க அனுமதித்ததாகவும் அதற்கான முழுத்தொகையும்வழங்கியதாகவும் இதற்காக வழங்கப்பட்ட முற்பணம்    ரூபா .ஒரு இலட்சம் சிவலோஜினி அவர்களால் தங்களுக்கு இன்னமும் திருப்பி வழங்கப்படவில்லை

மேலும் 05-07- 2009 உடன் எமக்காக வழங்கும் உணவை நிறுத்துமாறு எழுத்து மூலம் தெரிவித்திருந்ததாகவும் ஏனெனி ல் உணவு வழங்கலில் ஊழல் நடைபெறுவதாக சந்தேகப்பட்டே இவ்வாறு அறிவித்திருந்தோம் என கூறினர்.

நாங்கள் அறிவித்த திகதிக்கு பின்னர் சிவோலோஜினி அவர்களால்   வழங்கப்பட்ட உணவுக்கும் எமக்கும் எந்த தொடர்பும் இல்லை என உறுதிபட கூறினார்கள் .


இதுதொடர்பாக சிவோலோஜினியிடம் கேட்ட போது அவர்கள் எழுத்து மூலமாக அறிவிக்கவில்லை எனவும் பணம் தருவார்கள் எனும் நம்பிக்கையிலேயே தொடர்ந்தும் உணவு வழங்கும் உதவியை செய்தேன் என தெரிவித்தார்.


மேலும் இது தொடர்பாக சிவன் அருள் இல்லம் எமக்கு தெரிவித்ததாவது தமது நிறுவனத்திற்கு களங்கம் ஏற்படுத்தும் பட்சத்தில் சிவோலோஜினி அவர்கள் மீது சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் மன்னார் இணையம் ஊடாக தெரிவித்ததுடன் சிவலோஜினிஅவர்களுக்கு சட்டத்தரணி மூலமாக அனுப்பி வைக்கப்பட்டுள்ள கடிதத்தின் பிரதி ஒன்றையும் எமக்கும் அனுப்பி வைத்துள்ளனர்.இது தொடர்பாக கதைப்பதற்கு எதுவும் இல்லை இப் பிரச்சனை அப்போதே முடிவடைந்து விட்டது எனவும்  கூறினார்கள்.


குறிப்பு - சிவன் அருள் இல்லத்துக்கும்   திருக்கேதீச்சர ஆலய நிர்வாகத்துக்கும் எந்த தொடர்புகளும் இல்லை ..

சிவன் அருள் இல்லம் பதிவு செய்யப்பட்ட ஒரு தொண்டு நிறுவனம் என்பதோடு மக்களுக்காக பல சேவைகளை செய்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது..








2009 ம் ஆண்டு சிவன் அருள் இல்லத்துக்காக சமைத்து வழங்கிய உணவுக்கான பணத்தினை சிவன் அருள் இல்லத்தினர் நான்கு வருடமாக தரமறுப்பதாக புகார்- பொய்யான குற்றசாட்டு என மறுக்கும் சிவன் அருள் இல்லமும் !! Reviewed by Admin on September 29, 2013 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.